வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Lovi-.தற்போது நீரிழிவு நோயால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. மேலும் அவர்கள்
எதை சாப்பிடுவதாக இருந்தாலும், அவற்றை அளவோடும், சாப்பிடலாமா, வேண்டாமா என்று
பயந்து கொண்டே சாப்பிட வேண்டியுள்ளது.
அதிலும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தான் அவர்கள் முற்றிலும் தவிர்க்க
வேண்டும். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஒரு பயமுமின்றி குடிப்பதற்கு ஒரு சில ஆரோக்கிய பானங்கள் இருக்கின்றன. இவற்றை குடித்தால், நீரிழிவு கட்டுப்படுவதோடு, உடலும் ஆரோக்கியமடையும். பால் பாலில் அதிகமான அளவில் கால்சியம், வைட்டமின் போன்றவை இருக்கிறது. இதனால் உடலில் உள்ள செரிமான மண்டலம் நன்கு செயல்படும். ஆனால் அதே நேரத்தில் அவற்றில் அதிகமான அளவில் கலோரிகளும், கார்போஹைட்ரேட்களும் இருக்கின்றன. ஆகவே பாலை குடிக்கும் போது, அவற்றில் ஸ்கிம் பால், பாதாம் பால் அல்லது சோயா பாலை குடிப்பது நல்லது. அதிலும் கேராமல் பாலை குடித்தால், உடலில் உள்ள இன்சுலின் அளவு குறையும். தண்ணீர் தண்ணீரில் உள்ள ஒரு சிறந்த தன்மை என்னவென்றால் இதில் கலோரி, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற எதுவும் இல்லை. இதனால் உடல் எடையும் அதிகரிக்காது, உடலில் உள்ள சர்க்கரையின் அளவும் அதிகரிக்காது. ஆகவே வெறும் தண்ணீரை குடிக்கப் பிடிக்காதவர்கள், சிறிது எலுமிச்சை சாற்றுடன், தேனை கலந்து குடிக்கலாம். டீ காலை எழுந்ததும் உடலை புத்துணர்ச்சியாக்க டீயை குடிக்க வேண்டும் என்று தோன்றும். உண்மையில் டீ குடித்தால் உடல் புத்துணர்ச்சியடையும். மேலும் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலை இளமையுடன் வைத்திருக்கும். அதிலும் நீரிழிவு நோயாளிகள் டீக்கு சர்க்கரை போட்டால் தான் பாதிப்பு ஏற்படும் என்று செயற்கை இனிப்புகளை பயன்படுத்துகின்றனர். இதனால் உடலுக்கு நல்லதல்ல. ஆகவே நீரிழிவு நோயாளிகள் டீ குடிக்க வேண்டும் என்று நினைத்தால், ஸ்கிம் மில்க்கில் டீ போட்டு, சர்க்கரை போடாமல் குடிப்பது நல்லது. ஜூஸ் ஜூஸ் குடித்தால் உடலுக்கு நல்லது தான். ஏனெனில் அவற்றில் கலோரிகள், கார்போஹைட்ரேட் போன்றவை இருக்கின்றன. ஆனால் அதையே சர்க்கரை நோயாளிகள் குடிக்க வேண்டுமென்றால், பழ ஜூஸ்களை குடிப்பதை விட, காய்கறி ஜூஸ்களை குடிப்பது நல்லது. ஏனெனில் அவற்றில் தான் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் சற்று குறைவாக உள்ளது. காபி காபியும் உடலி புத்துணர்ச்சிக்கு ஓய்வு நேரத்தில் குடிக்கும் ஒரு பானம். இந்த காபியை நீரிழிவு நோயாளிகளும் குடிக்கலாம். ஆனால் ப்ளாக் காபியைக் குடிப்பது தான் நல்லது. அதுவும் அதில் எந்த ஒரு கிரீம் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். இல்லை பிளாக் காபியை குடிக்க விருப்பமில்லாதவர்கள், ஸ்கிம் பாலால் காபி போட்டு குடிக்கலாம். ஆல்கஹால் நீரிழிவு இருப்பவர்களுக்கு ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் இருந்தால், முதலில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பின் பருக வேண்டும். ஏனெனில் ஆல்கஹால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். ஆனால் அதுவே இரத்தத்தில் குறைந்த அளவு சர்க்கரை இருந்தால், ஹைப்போ கிளைசீமியாவை ஏற்படுத்திவிடும். ஆகவே பார்த்து அளவோடு சாப்பிட வேண்டும் |
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற குளிர்பானங்கள்
Tags :
சுகாதார செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen