QWERTY Keybord உடன் அறிமுகமாகு​ம் LG Mach கைப்பேசிகள்

வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, ByLovi.நவீன அம்சங்களுடன் கூடிய கைப்பேசிகளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்திவரும் LG நிறுவனமானது தற்போது QWERTY Keybordகள் மற்றும் 4G வலையமைப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய Smart Phone-களை அறிமுகப்படுத்துகின்றது. கூகுளின் Android 4.0 Icecream Sandwich இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசிகள் 4 அங்குல அளவுடைய தொடுதிரையினையும் கொண்டுள்ளதாக காணப்படுகின்றன. அத்துடன் இதன் திரைகள் 540 x 960 Pixels உடையனவாகும்.
மேலும் Qualcomm S3 தொழில்நுட்பத்தில் அமைந்த 1.2GHz வேகத்தில் செயலாற்றக் கூடிய Processor-னையும், முதன்மை நினைவகமாக 1GB RAM இனையும் கொண்டுள்ளன.
இவற்றுடன் 5 Mexapixels கொண்ட துல்லியமான புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.