பொதுவாக கால் முட்டி, கை மணிக்கட்டு, தோள்பட்டை, போன்ற இடங்களில் முதல்நிலை எலும்பு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புற்றுநோய் ஏற்பட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்படும் இதனால் ஏற்படும் வலியால் உடம்பே அசைக்க முடியாத நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு எலும்பு முறிவு போன்ற அறிகுறி இருந்தால் கண்டிப்பாக டாக்டரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து மாத்திரைகள் எடுத்தும் வலி குறையவில்லை எனில் அது எலும்பு புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
எலும்பு புற்றுநோய் ஏற்பட வயது வரம்புகள் எதுவும் இல்லை. இளம் வயதில் மூட்டு வலி வந்தால் அதனை அலட்சியமாக கருதி இருந்துவிடக்கூடாது. பொதுவாக 10 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்களுக்கும் எலும்பு புற்று நோய் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதை மருத்துவமனை பரிசோதனையிலே 60 சதவீதம் கண்டுபிடித்துவிடலாம். இருந்தாலும் எக்ஸ்ரே, எலும்பு ஸ்கேன்( போன் ஸ்கேன்), சி.டி.எஸ் ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், திசு பரிசோதனை மூலம் எளிதில் கண்டுபிடித்து எலும்பு புற்றுநோய் உள்ளதா என்று கண்டுபிடிக்க முடியும்.
பொதுவாக புற்றுநோய் தன்மை எந்த இடத்தில் உள்ளது என்பதை பொறுத்து கீமோ தெரப்பி, ரேடியோ தெரப்பி, அதனுடைய செல்களை அளிப்பது, அறுவைசிகிச்சை மூலம் புற்றுநோயை முற்றிலும் அகற்றிவிடாலாம் ஆனால் எலும்பு புற்றுநோய் பொறுத்தவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அகற்றிவிட்டு செயற்கை எலும்பு கட்டாயம் பொருத்தவேண்டும். இல்லாவிட்டால் நோயாளி இயல்பாக நடக்க முடியாத நிலை ஏற்படும்
பாதிக்கப்பட்ட எலும்பு பகுதியை அகற்றிவிட்டு செயற்கை எலும்பு அல்லது போன் சிமென்ட் ஆகியவற்றை பொருத்தி சரிசெய்யலாம்.
இதனால் செயற்கை எலும்புகள் ஸ்டெயின் லெஸ்டீர், டைட்டானியம் அலாய் மூலம் இதனை சரி செய்யலாம். இதன் விலை அதிகபட்சம் 40 ஆயிரம் வரை ஆகும். இதனை நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மக்களும் செய்து கொள்ள இயலும். இதற்கான அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் வரைசெலவு ஆகலாம் தமிழ்நாட்டில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் மட்டுமே எலும்பு வங்கி செயல்படுகிறது. எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் 60 சதவீதத்தினர் கடும் வலியால் அவதிப்படுகின்றனர். இதற்கு காரணம் எலும்பில் புற்றுநோய் செல் பெருமளவில் பரவுவது தான் காரணம். ஆனால் வலியை முழுமையாக குணப்படுத்த முடியாது.
தொடர்ச்சியாக வலி ஏற்படுவதற்கு புற்றுநோய் ஏற்பட்ட பகுதியில் திசுக்கள் சேதமடைந்திருப்பது தான் முக்கிய காரணம். எலும்பு புற்றுநோய் ஏற்பட்ட அனைவருக்கும் வலி ஒரே மாதிரியாக இருக்காது. வயது, உடம்பு திறன் போன்ற பல்வேறு காரணிகளால் வலி மாறுபடும். புற்றுநோய் வலி ஏற்படுபவர்களுக்கு பல வகை சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. வலி நிவாரணியாக பல வகை மருந்துகள் அளிக்கப்படுகிறது. இதனால் சில சமயங்களில் பக்க விளைவுகள், உடல் சோர்வு ஏற்படுத்தும். ஸ்டிராய்டு மருந்துகள் மூலம் வலி ஏற்பட்டிருப்பதை உணராத நிலையை உருவாக்க முடியும். ஆனால் பெரும்பாலும் கதிர்வீச்சு சிகிச்சை முறை தான் பரிந்துரை செய்யப்படுகிறது.
ஆனால் பல வகை சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் எலும்பு புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு நிரந்தர நிவாரணி என்பது மனரீதியாக அதை தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்தி கொடுப்பது தான். அதேபோல் அவர்களுக்கு கவுன்சலிங் வழங்கவேண்டும். மூச்சு பயிற்சி மற்றும் உடற்பயிற்சி வழங்குவது மூலம் வலியை குறைக்க முடியும். மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து மாத்திரைகள் எடுத்தும் வலி குறையவில்லை எனில் அது எலும்பு புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். எலும்பு புற்றுநோய் ஏற்பட வயது வரம்புகள் எதுவும் இல்லை
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen