குரோம் உலாவியில் Home பொத்தானை தோற்றுவிப்​பதற்கு

 சனிக்கிழமை, 13 ஒக்ரோபர் 2012, By.ByLovi.
இணையத்தில் தகவல்களை தேடித் தருவதில் முதல்வனாகத் திகழ்பது கூகுள் தயாரிப்பான குரோம் உலாவியாகும். இவ் உலாவியானது மிகவும் எளிமையான வடிவமைப்பினை கொண்டுள்ளதுடன் ஏனைய உலாவிகளுடன் ஒப்பிடும் போது தொழிற்படுவேகம் கூடியதாகக் காணப்படுவதுடன் பல வசதிகளையும் கொண்டுள்ளது.
இவ் உலாவியில் அனேகமான வசதிகள் வெளிப்படையாக இல்லாது மறைமுகமாகத் தரப்பட்டுள்ளன. அதே போன்று Home பொத்தானும் சில சமயங்களில் மறைக்கப்பட்டிருக்கலாம். எனவே இதனை தோற்றுவிப்பதற்கு பின்வரும் படிமுறைகளைக் கையாளவும்.
1. குரோம் உலாவியினை ஓப்பன் செய்து அதன் வலது பக்கத்தில் காணப்படும் Custermise and Control எனும் பொத்தானை அழுத்தி மெனுவினை தோற்றுவிக்கவும்.

2. தோன்றும் மெனுவில் Settings என்பதை தெரிவு செய்யவும்.

3. தொடர்ந்து தோன்றும் பக்கத்தில் Appearance பகுதியில் காணப்படும் show home button என்பதை தெரிவு செய்யவும்.


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.