டிசம்பர் 20,2012.நடராஜர் கோவில்களில், ஆருத்ரா தரிசன விழா, நேற்று துவங்கியது.கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நேற்று அதிகாலை, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்து, பக்தர்களுக்கு காட்சியளித்த பின், நடராஜர் சுவாமி சிற்சபைக்கு எதிரில் உள்ள கொடி மரத்தில், உற்சவ கொடியான பசுக் கொடியை உற்சவாச்சாரியார், தில்லை நாகபூஷண தீட்சிதர் ஏற்றினார். முக்கிய விழாவான திருத்தேர், வரும், 27ம் தேதியும், ஆருத்ரா மகா தரிசனம், 28ம் தேதியும் நடக்கிறது. ராமநாதபுரம் அருகேயுள்ள, உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில், குருக்கள் மங்கள முனீஸ்வரர் தலைமையில், விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. யாக சாலையில் பாலிகை ஸ்தாபனம் செய்யப்பட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் துவக்கம்!
Tags :
ஆலய நிகழ்வுகள்
Related Posts :

யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வா...

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் வடமரா...

விக்கினங்களை தீர்க்கும் விநாயகரிற்க...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் த...

யாழ் கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு ...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ...

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்...

கொல்கத்தா அயோத்தி இராமர் கோவில்ஜனவர...
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen