தொல்லை நீக்கியார்.. சங்கடநாஸன கணபதி.


இளஞ்சூரியனைப் போன்ற நிறத்தோடு நீல நிற ஆடையணிந்து கொண்டு செந்தாமரையில் வீற்றிருப்பார். வலது கரங்களில் அங்குசமும் வரதமும் விளங்கும். இடது மேல் கரத்தில் பாசம் இருக்கும். தொடையின் மீது தன்னுடைய சக்தியை அமர வைத்திருப்பார். செம்மை நிறமுடைய அந்த சக்தி நீல நிற உடையும் ஆபரணங்களும் அணிந்து நீல மலரை ஏந்தியிருப்பார்கள். சங்கடநாஸனார் தமது இடது கீழ்க் கரத்தால் அந்த சக்தியை அணைத்தவாறு பாயசப் பாத்திரத்தைத் தாங்கியிருப்பார்.
 'சங்கடஹர கணபதி' என்றும் 'சங்கடநாஸன கணபதி' என்றும் பெயர் பெற்ற இவரைத் தமிழில் நாம் 'தொல்லை நீக்கியார்' என்று அழைக்கிறோம்.
 விநாயகரின் தத்துவம் விநாயகர் அட்டகத்தின்மூலம் இங்கு விளக்கப்படுகிறது. "காரியசித்தி மாலை" என்றும் இது அழைக்கப்படுகிறது.
காரியசித்தி மாலை

8.
பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கு அரிய
 பரன் யாவன்
 பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும்
 அவன் யாவன்
 பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம்
 அறிவான
 தேசன் எவன் அக் கணபதியத் திகழச் சரணம்
 அடைகின்றோம்.
நூற்பயன்
 இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினம் மும்மைச்
 சந்திகளில் தோத்திரம் செயினும் சகல கரும சித்தி பெறும்
 சிந்தை மகிழச் சுபம் பெறும் எண் தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப் பந்தம் அகல ஓர் எண்கால் படிக்கில் அட்ட சித்தி உறும்.
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழ ஒருபான் முறை ஓதில்
 தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத்தொரு முறைமை
 பொங்கும் உழுவலால் கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக் கல்வி
 துங்க வெறுக்கை முதற் பலவும் தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.