அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலா மயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே.
விளக்கம்:
அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே!என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே!உயர்ந்த மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே! சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும் பக்தர்களையுடையவளே! பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen