சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு/திருமதி இராஜேஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அஸ்வினி தனது பதினோராவது பிறந்தநாளை இன்று (21.11.13)கொண்டாடுகின்றார்.இவரை அன்பு அப்பா,அம்மா ,தங்கை அபிஷா,அம்மம்மா,அப்பம்மா,மாமா சித்திமார்,மாமிமார்,குடும்பநண்பர்கள்,உறவினர்கள்,மற்றும்
பள்ளிநண்பிகளுடன் நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றது ,
உன் பிறந்த நாள்
பரிசு என்ன வேண்டும்
என்று கேட்டதற்கு
என்ன பரிசாக இருந்தாலும்
என் பிறந்த நாளில் பிறந்ததாய்
இருக்க வேண்டும்
என்றாய் ...
எனக்கு தெரிந்து
என் கவிதை தவிர வேறொன்றும்
இன்று ஜனனமாகவில்லை...
பல்லாண்டு வாழ்க ...
நீயும் உன் உணர்வுகளும்..
மலரிலும் மெல்லிய மனமிது தழைத்திட
நற் குணநலன் பெற்றிங்கு எம்
குலமகள் வாழ்ந்திட
கலைகளைப் பயின்றிட
நற் கடமைகள் புரிந்திட
அறிவுசார் செல்வமும்
அன்பொடு தன்னடக்கமும்
தெளிவுறப் பெற்ற ஞானமும்
சிந்தையில் நல்லுணர்வும்
தித்திக்கும் வாழ்வதனில்
திசை எட்டும் போற்றும் வண்ணம்
எத்திக்கிலும் இடரின்றி
இவள் வாழ்வு நலன் பெறவே
வாழ்த்துகின்றனர்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen