""நடைபெற்ற எண்ணெய்க்காப்பு வைக்கும் நிகழ்வு""
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை யொட்டி எண்ணெய்க்காப்பு வைக்கும் இரண்டு நாள் நிகழ்வில் முதலாம் நாள் நிகழ்வு புதன்கிழமை நண்பகல் பிரதிஷ்டா வித்தகர் கிரியாக்ரமஜோதி பிரம்மஸ்ரீ இலஷ்மீகாந்த ஜெகதீசக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. 19ம் திகதி செவ்வாய்கிழமை கிரியைகளுடன் ஆரம்பமாகி இரண்டு நாள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வின் முதலாம் நிகழ்வு புதன்கிழமையும் இரண்டாம் நாள் நிகழ்வு வியாழக் கிழமையும் இடம்பெற்று மறுநாள் வெள்ளிக்கிழமை மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. முதலாம் நாள் எண்ணெய் வைக்கும் நிகழ்வில் சிறுவர் முதல் பெரியோர் வரை ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் வகையில் இறைவனுக்கு எண்ணெய் சாத்தினர்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen