திருக்கார்த்திகை விளக்கீட்டுமகிமை....

 
கார்த்திகை விளக்கீடு வழிப்பாட்டின் மகிமையை விளக்கும் கார்த்திகை
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும். கார்த்திகை தீபம் அது சாதாரண தீபமல்ல. ஏனென்றால் திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிகச் சிறப்பு மிக்க தீபம்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம். கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களில் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம்.

ஏனென்றால் இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி நரம்புகளெல்லாம் சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞானம் சித்தியாகும். அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான். இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார் எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம்.

விரத முறை
இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.
வீடுகளை அலங்கரிக்கும்

முறை பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர். கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும். இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை.

இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் எனப்படுகிறது. கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும் கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார்.

திருவண்ணாமலையில் கணக்கிட முடியாத அளவிற்கு நவரத்தினங்களும் தங்கங்களும் கொட்டிக் கிடக்கிறது. இவ்வளவும் அந்த மலைக்கு கீழ் கொட்டிக் கிடக்கிறது. இதெல்லாம் ஒரு காலத்தில் வெளிப்படும். பிற்காலத்தில் அதையெல்லாம் பார்க்கப் போகிறார்கள்.

அதனால்தான் அந்த மலையைச் சுற்றினாலேயே அத்தனை இன்பம் கிடைக்கும் என்று சொல்வது. அந்த அளவிற்கு மிகப் பழமையான மலை. அதனால்தான் இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார். உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால் ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது. இதில் பரணி தீபம் இருக்கிறது. கார்த்திகை தீபம் இருக்கிறது. பரணி தீபம் என்பது பொருள் செல்வம் சொத்து சுகம் பதவி பட்டம் புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது. கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும் பொருள் வேண்டாம்.

அருள் வேண்டும் என்பது. நிதி வேண்டாம் கருணை நிதி வேண்டும் என்று இராமலிங்க அடிகளார் சொல்வதைப் போல கருணை நிதி கொடுக்கக் கூடியது கார்த்திகை தீபம். எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்புஉண்டாகும். எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால்இ இதயத்திற்குள் ஒளி ஆற்றலை கொண்டு சென்றால்இ எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். தவிர ஒரு தெளிவு நிலை தீர்க்க நிலை

உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் விரத முறை இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர்.

மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். ஸவீடுகளை அலங்கரிக்கும் முறை பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர் பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம். சங்கநூல்களில் கார்த்திகை கார்த்திகை மாலை-விளக்கு வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன்.

அவன் மகள் தித்தன். அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.) இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது


 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.