11வது பிறந்தநாள் வாழ்த்து:செல்வி தேனுகா தேவராசாஅவர்கள் 15.11.2013 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார், சிறந்த பின்னணி பாடகியாக விளங்கிவரும் தேனுகா.தேவராசா பாடும் திறன் உள்ளவரும் பல இசைப்பேளைகளில் பாடியுள்ளவரும் ஆவார்.இவர் தன் தந்தை இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார் அதுமட்டுமல்ல இவர் தனது ஐந்தாவது வயதில் கவிஞர் திரு என்.வி.சிவநேசன் வெளியிட்ட புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையில் பல பாடலை பாடியுள்ளார்(இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்கள் இவர் திறனைப்பாராட்டினார்)அத்தோடு மட்டுவில்: ஞானவைரவர் இசைப்பேளை.டென்மார்க் அபிராமி அம்மன் இசைப்பேளை,டோட்மூண்ட் சிவன் இசைப்பேளை, சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கை இசைப்பேளை முல்கையில் முத்துக்குமாரசா இசைப்பேளையிலும் பாடியுள்ளார்.
இவர் கலைத்துறையில் வலம் வந்து சிறந்து விளங்கி
பலர்போற்ற இசைப்பணி தொடர வாழ்த்துவோம்.இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம் நவக்கிரி.கொம் உறவு இணையங்களும் நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
கலையின் வழங்களை இனிவரும் சந்ததியின் கையில் கொடுப்போம்
கலைவளரும் அவர்கள் நிலை மலரும்
பாரின் எம் இசை வடிவம் வளரும்
இதுதான் நாம் கலைக்கு எம்மை அர்ப்பணிக்கும் பணியாகும்!
இசையின் கலையிலே
இன்பம் உறுபவள்
இனிய குரலாலே பாடிமகிழ்பவள்
இவள் இன்புற்று நல்லோர்கள் வாழ்த்த
வளம் பொங்க வாழ்வாய்
வாழ்கபல்லாண்டு
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen