இன்று வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு

அதிகாலையில் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
மார்கழியில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்தால் பாவங்கள் விலகி வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்காக பக்தர்கள் நேற்று முதலே விரதம் இருந்து ஒரு வேளை மட்டும் உணவு உண்டனர். இன்று அதிகாலையில்

சொர்க்கவாசலில் பெருமாளை தரிசனம் செய்து துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி சுத்த ஏகாதசி விரதம் இருப்பர். இன்றில் இருந்து நாளை துவாதசி பகல் முழுவதும் விழித்திருந்து ஹரி நாமத்தை மட்டும் ஜெபிப்பர். துவாதசியன்று பாரணம் எனும் அனைத்து காய்கறிகளால் குழம்பு வைத்து பெருமாளுக்கு படைத்து விரதத்தை பூர்த்தி செய்வர். விரதத்தில் அகத்தி கீரை, நெல்லி மற்றும் சுண்டைக்காய்

கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இதில் அகத்திகீரை பாற்கடல் அமுதமாகவும், நெல்லி மற்றும் சுண்டைக்காய் லட்சுமியின் அம்சமாகவும் கருதப்படுகிறது. இன்று தூங்காமல் ஹரி நாமத்தை சொல்லி வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் காலை துவாதசியன்று நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் உட்பட பல்வேறு காய்கறிகளை உணவில் சேர்த்து விரதத்தை முடிப்பர்.

    இன்று தல்லாகுளம் பெருமாள் கோயில் மற்றும் அழகர் கோயில் கள்ளழகர் பெருமாள் கோயிலில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பெருமாளை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நெடிய வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்கும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் பெருமாள் மோகனவதாரத்தில் காட்சி அளித்தார். இந்த

அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று இரவு பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளாக பூதேவி, ஸ்ரீதேவியுடன் சயன அலங்காரத்தில் காட்சி அளித்தார். கூடலழகர் பெருமாள் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு மேல் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்வர்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.