நல்லவன் எனப் பெயரெடு!


pillaiyar
மனிதன் எந்த நிலையில் எந்த இடத்தில் இருந்தாலும் இறைவனின் கல்யாண குணங்களைக் கேட்பதை, தன் வாழ் நாளின் லட்சியமாகக் கொள்ள வேண்டும். * சத்தியம் என்றால் வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் கூறுவதே சத்தியம். அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். * முதலில் வேண்டியது வெளி அடக்கம். வெளி அடக்கமே மனதில் உள்அடக்கத்தை உண்டு பண்ணும். மனம் அடங்கும் போது ஞானம் தலைகாட்டும். * எடுத்துச் சொல்வதைவிட, எடுத்துக்காட்டாக இருப்பது சிறப்பு. பார்த்த அளவிலேயே நல்ல மனிதர் என்று கூறும்படியாக நம் வாழ்க்கை நடைமுறை இருக்க வேண்டும். * கோபத்தால் நமக்கு நாமே தீங்கு செய்து கொள்கிறோம். கோபம் என்பது நல்வழியிலிருந்து திசை திருப்பி நம்மை அழிவுப்பாதைக்கு அழைத்து சென்றுவிடும். * குடும்ப கடமைகளை விட்டு வெளியே வந்து சேவை செய்ய வேண்டியதில்லை, குடும்பத்தையும் பார்த்துக் கொண்டே சமூகசேவையும் சேர்த்து செய்வதே சரியானது. -காஞ்சிப்பெரியவர்
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.