தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்


சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம்.
முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜெபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும்.
அதன்பின் 108 வீதம் தொடர் ஜெபம் செய்து அதன்பின் சங்கல்ப சங்கியை அல்லது அக்ஷரலக்ஷம் நிறைந்ததும் பாராயணம் செய்ய வேண்டும். இதனை புன்னை மரத்தடியில் ஜெபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜெபம் செய்ய ஏற்ற தலமாகும்.
ஜெபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜெபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜெபம் செய்ய ஏற்ற காலம்.
அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா
 மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்
 சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா
 க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்
 மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-
த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:
க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம் க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்
 த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்
 ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம்
 லம்-இத்யாதி பஞ்சபூஜா

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.