வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று 27.08.2015.வியாழக்கிழமை இடம்பெற்றது. அதிகாலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத்
தொடர்ந்து அடியவர்களின் அரோகரா கோஷத்தின் மத்தியில் அம்பாள் அழகிய திருத்தேர் ஏறி
அடியவர்களுக்கு காட்சியளித்தாள். யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இடம்பெற்ற இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் மினிபஸ் வண்டிகளின் சேவையுடன் அதிக எண்ணிக்கையான பக்தர்கள் தேர்த்
திருவிழாவில் கலந்து கொண்டார்கள். அத்துடன் புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகை தந்த அதிகளவு பொதுமக்களும் கலந்து கொண்டார்கள். பக்தர்கள் கற்பூரச் சட்டி எடுத்தும் அடி அளித்தும்
அங்கப்பிரதட்சை செய்தும் தூக்கு காவடிகள் பறவைக்காவடிகள் மற்றும் சப்பாணிக் காவடிகள் எடுத்தும் தமது நேர்த்திகளை நிறைவுசெய்தார்கள்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen