பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மன்மத வருட மகோற்சவ ஆரம்ப நாளான (02/08/2015) அன்னையின் ஆலயத்தில் இடம்பெற்ற கொடியேற்ற உற்சவ நாளில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் புகழ்பாடும் “அற்புதகீதங்கள்” இறுவட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும், இவ் நிகழ்வில் கலந்து ஆசிகள் நல்கி இறுவட்டின வெளியிட்டு வைத்த
நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் அவர்களுக்கும் இவ் நிகழ்வுகளை ஒழுங்குற நிகழ்த்திய காரை எம்.பி. அருளானந்தம் அவர்களுக்கும் ஆலய ஆதீனகர்த்தாக்களுக்கும் குருமார்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.P1270318-Lமேலும் இப்பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் அவர்களுக்கும் இப்பாடல்களை எழுதிய
சிவஸ்ரீ.பே.ஜெகநாதன் ஐயா மற்றும், நயினை அன்னைமகன் தி.செ.ம. நவரூபன் அவர்களுக்கும் இப்பாடல்களுக்கான குரல்வளம் நல்கிய எஸ்.ஜீ.சாந்தன், க.ஜெயரூபன், ஸ்ரீ.சுலக்ஷன், சா.கோகுலன், நெடுங்கேணி இராஜேந்திரா, ஜெயப்பிரதா.க, க.ஜெயந்தன், மற்றும் எஸ்.ஜீ.கோபு அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இவ் நிகழ்வுகளை ஒலிப்பதிவு செய்து
உலகமெங்கிலும் அன்னையின் அடியவர்கள் பார்த்து மகிழ உதவிய அனலை எக்ஸ்பிரஸ் நிறுவனத்தாருக்கும் பிரபா கேதீஸ் அவர்களுக்கும் இவ் வெளியீட்டு நிகழ்வுச் செய்திகளை இணையத்தினூடாக யாவரும் அறிய உதவிய அனலை எக்ஸ்பிரஸ், உதயன், அதிரடி, யாழ் எப்.எம் வானொலி, மற்றும் நயினை ஸ்ரார் இணையத்தினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen