வினாயக பெருமானை இல்லத்தி்ல் அமரவைக்கும் முன் இல்லம் முழுதும் சுத்ததம் செய்து வினாயகர் வைக்கும் இடத்தில் வெள்ளை துணி போட்டு அதன் மேல் ஒரு மனை போட வேண்டும் இரண்டு தீபம் ஏற்றி மனை முன்பு இரண்டு வெற்றிலை ஒரு கொட்டை பாக்கு வீதம்
ஐந்து இடத்தில் வைக்கவும் அதன் மேல் ஒரு மஞ்சள் கொம்பு ஒரு உலர்ந்த பேரிச்சம் பழம் ஒரு ரூபாய் நாணயம் சிரிது அரிசி ஐந்து விதமான பழம் ஒன்று ஒன்று வைக்க வேண்டும் வினாயகரை மனை மீது அமர வைத்து வேட்டி துண்டு கட்ட வேண்டும் சந்தனம் குங்குமம் வைத்து
அருகம்புல் மாலை எருக்கம்பூ மாலை சூற்ற வேண்டும் நெய்வேத்தியம் வைத்து ஒரு மஞ்சள் துணியில் அரிசி வெல்லம் ஒரு எலுமிச்ச பழம் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைத்து கட்டி வினாயகர்
மடியில் வைக்கவேண்டும் பின்பு மங்களார்த்தி செய்து பிள்ளைகள் இல்லத்தில் இருப்பவர்கள் அமர்ந்து இந்த நாமத்தை கூற வேண்டும்
ஓம் ரீம் சிரிம் ரீம் ஹூம் ரீம் சுவாஹம்
ஓம் கணனாயகாய கணபதியே நமோ
ஓம் ரீம் ரீம் சிரிம் சுவாஹம்
ஓம் விக்ணாதிபதியே நமோ
ஓம் ரீம் ரும் ஹம் சுவாஹம்
ஓம் சித்தி வினாயகாய நமோ
சித்தம் புத்தம் ஞானம் வஸ்த்ரம் ஆரோக்யம் சகல சம்பத்தும் சுபம் வரதேவோ யாமி
ஓம் கம் கணபதியே நமக
ஓம் சாந்தி சாந்தி சாந்தியே
என்று கூறி பிராத்தனை செய்து துளசி நீர் எடுத்து பழம் நெய்வேத்தியதிற்கு நீர் ஆராதனை செய்ய வேண்டும்
வினாயகனை நீரில் விடும் போது மஞ்சள் துணியில் கட்டிய பொருளில் எலுமிச்சபழம் ஒரு ரூபாய் நாணயம் எடுத்து கொண்டு மற்ற பொருள் அனையும் வினாயகர் இடுப்பில் கட்டி விடவேண்டும் எலுமிச்சபழம் வீட்டிற்கு திருஷ்டி சுத்தி போடவும் ஒரு ரூபாய் நாணயம் பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும் நன்மை ஆகும்
இந்த நாமத்தை ஒவ்வெரு திங்கள் கிழமை இல்லத்தில் இருக்கும் கணபதிக்கு அருகம்புல் வைத்து பிள்ளைகள் கூறினால் நல்ல ஞானம் கிடைக்கும்
குருவே சரணம்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen