நல்லை கந்தன் தீர்த்த உற்சவ மாலை நேரத்திருவிழா

இலங்கையில் வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் தீர்த்த திருவிழா (12.09.2015) அன்று  பக்திபூர்வமான முறையில் . சுவாமியின் தீர்த்த திருவிழாவும் திருவீதி உலாவும் முருகனிடம் அருளைப் பெற்றுக் கொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர் படை சூழ மிகசிறப்பாக 
நடைபெற்றது .
நல்லூர் திருவிழாவைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக்காட்சி. முருகன் என்றால் அழகன். கதிர்காமக் கந்தனை ஒளிவீசும் கந்தன் என்றும் காவல் கந்தன் என்றும், செல்வச்சந்நிதியானை - அன்னதானக் கந்தன் என்றும்  அழைப்பதுபோல் நல்லூரானை அலங்காரக் கந்தன் என்று முருகபக்தர்கள் அழைக்கின்றார்கள்.

புராணங்களில் முருகனின் திருவுருவம் குமரன், கந்தன்,  வீசாகன்,  குகன் என்ற நான்கு வடிவங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்தன் கடம்ப மாலையை சூடி கடம்ப மரத்தின் கீழ் உறைபவன் என்கிறது சிலப்பதிகாரம்.

முருகனை தமிழ் கடவுள் என்று கூறுவதற்குப் பல சான்றுகள் உண்டு. அகத்தியனுக்கு தமிழைத் தந்தவனும் முருகன், குமரகுருபரனுக்குப் பேச்சுத்திறனை அளித்தவனும் முருகன், முத்துசாமி தீட்சிதருக்குப் பாடும் வல்லமையையும், ஒளவைப்பிராட்டிக்கு ஞானத்தையும் புகட்டியவன் முருகன் என்பன குறிப்பிட்த்தக்கவை
நிழல்படங்கள்  இணைப்பு 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>











0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.