சகல சித்தியும் தரும் ஆதிலட்சுமி, சிறப்புகள் வழங்கும் சந்தான லட்சுமி, அரச போகம் தரும் கஜ லட்சுமி, செல்வம் தரும் தன லட்சுமி, பசி தீர்க்க உணவளிக்கும் தான்ய லட்சுமி, கவலையைப் போக்கும் மகாலட்சுமி, வெற்றியைத் தரும் விஜய லட்சுமி, வீரம் கொடுக்கும்
வீர லட்சுமி ஆகிய எட்டு வகை லட்சுமிகளையும் விரதமிருந்து வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைத்து வருகைப்பதிகம் பாடவேண்டும்.
தன லட்சுமியின் அருளைப் பெற வேண்டுமானால், வசதி இல்லாதவர்களுக்கு பொருளுதவி செய்ய வேண்டும். தான்ய லட்சுமியின் அருளைப் பெற, பசியோடு வருபவர்களுக்கு உணவளிக்க
வேண்டும்.
வித்யா லட்சுமியின் அருள் கிடைக்க, படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு புத்தகம், பேனா வாங்கிக் கொடுக்க வேண்டும். இதுபோல அந்தந்த லட்சுமிக்கு விரத வழிபாடுகளையும், அவை மகிழ்ச்சியடையும் விதத்தில் செயல்பாடுகளையும் செய்தால் செல்வச்
செழிப்புடன் வாழலாம்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen