ஆவர்த்தப் பிரதிஷ்டை - என்பது முதல் பிரதிஷ்டையைக் குறிக்கிறது
அனாவர்த்தப் பிரதிஷ்டை - பழுது ஏற்பட்டு புனர் நிர்மாணம் செய்யும் போது செய்யப்படும் பிரதிஷ்டை
புனர்-ஆவர்த்த பிரதிஷ்டை - சிறிய பழுதுகளை களைந்த பிறகு பிரதிஷ்டை செய்வது
அந்தரித பிரதிஷ்டை - பெரும் பாதிப்புக்களோ இழப்புக்களோ நேர்ந்து பின்னர் செய்யப்படும் பிரதிஷ்டை
அனுக்கிரகம் - அருள் செய்தல்
அன்னதானம் - உணவு கொடுதல்
ஆராதனை - வழிபாடு
உற்சவம் - விழா
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
கோத்திரம் - குடி
சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு
சரணம் - அடைக்கலம்
சிவமதம் - சிவநெறி
பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு
பிரசாதம் - திருப்பொருள், சுவாமிக்கு படைத்த உணவு
பிரகாரம் - திருச்சுற்று
(அங்கப்) பிரதட்சனம் - வலம் வருதல்
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்
மந்திரம் - மறைமொழி
மார்க்கம் - நெறி, வழி
விக்கிரகம் - திருவுருவம்
யாத்திரை - திருச்செலவு
க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள்
திருப்பணி - தொண்டு
பஞ்சபுராணம் - தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, புராணம்
ஹோமம் - யாகம்
ஹோம திரவியம் - யாகத்திற்க்கு பயபடும் பொருட்கள்
ஹோமகுண்டம் - பெரிய குளி
யாகசாலை - யாகம் வளர்ப்பதற்கான இடம்
ஆச்சாரியர் - இறைவனுக்கு பூஜை செய்பவர், பூசகர் , ஜயர், குருக்கள்
ஆகுதி - நெருப்பு
பெளத்திரம் - தர்ப்பையால் கட்டப்பட்ட மோதிரம்
நக்ஷத்ரா - நட்சத்திரம்
திருவலகு பரிமாறுதல் - வேல் குத்துதல்
திருப்பணி - கடவுட்கைங்கரியம்.
திருவிளக்கு - ஆலய தீபம்
மஞ்சம் - சிறிய தேர்
திருப்பதி - திருவேங்கடம் : புண்ணியத்தலம்.
திருக்குட முழுக்கு - கும்பாபிஷேகம், நீராட்டு
திருப்பூட்டுதல் - மணமகள் கழுத்தில் மாங்கலியந் தரித்தல்.
திருமகள் - இலக்குமி.
திருமகன் - திருமால் : திருமகள் மைந்தன் : காமன் : செல்வன்.
திருமஞ்சனம் - நீராட்டுகை : திருமுழுக்கு.
திருமுழுக்கு - நீராட்டு.
திருமுளைப்பாலிகை - திருமணம் முதலிய விசேடங்களில் தானிய முளை வளர்க்கப் பெறும் பாலிகை.
திருமுறை - சிறப்பமைந்த நூல்.
திருமுற்றத்தார் - கோயிற்பணி செய்வோர்.
திருவடி நிலை - விக்கிரக பீடம்.
திருக்காப்பு -
திருவணுக்கன் திருவாயில் - கர்ப்பக் கிருகத்தை அடுத்துள்ள வாயில்.
திருவம்பலம் - சிதம்பரம்.
திருவாசி - இறைவங்க்கு பின்புறம் சாத்தும் அணிகலம்.
திருவுளச்செயல் - தெய்வச் செயல்.
திருவுளம் - தெய்வத்தின் எண்ணம்.
திருவுளம் வைத்தல் - அருள் புரிதல்.
திருவெம்பாவை - மார்கழி மாதத்தில் ஓதப்படும் திருவாதிரை விழாப்பாடல்.
திருவேகம்பம் - காஞ்சிபுரம்.
திருவேடம் - சமயவேடம் : சைவக் கோலம்.
திருவோணம் - இருபத்தேழு நாள் மீன்களுள் ஒன்று.
புஸ்பாஞ்சலி - இறைவனுக்கு மலர்களால் செய்யப்படும் பூஜை
புனருட்தானம் - திருத்தி அமைத்தல்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen