யாழ். குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய புதிய இராஜ கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று புதன்கிழமை(08-6-2016) காலை-8 மணிக்கு அம்பாளுக்கு விஷேட அபிசேக பூஜைகளுடன் ஆரம்பமாகி இடம்பெற்றது.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் சோ. பரமநாதன் தலைமையில் இடம்பெற்ற இராஜ கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் காலை- 8.50 மணி தொடக்கம் 9.45 மணி வரையுள்ள சதுர்த்தி விரதமும், புனர்பூச நட்சத்திரமும், அமிர்த சித்தமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் அடிக்கல் சம்பிராதய பூர்வமாக நாட்டப்பட்டது.
இந்த வைபவத்தில் ஆலயத் தலைவர் சோ.பரமநாதன், ஆலயப் பிரதமகுரு கிரியாகலாபமணி சிவஸ்ரீ சி. கிருஷ்ணசாமிக் குருக்கள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளரும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம், புதிய இராஜ கோபுரத்துக்கான நிர்மாணப் பணியை மேற்கொள்ளவுள்ள
க. சண்முகநாதன், குப்பிளான் விவசாய சம்மேளனத் தலைவரும் , குப்பிளான் உருளைக் கிழங்குச் சங்கத்தின் பொருளாளருமான செ-நவரத்தினராசா, குப்பிளான் கேணியடி ஆலய பரிபாலன சபைத் தலைவர் நா. கணேசலிங்கம், குப்பிளான் கன்னிமார் கெளரியம்பாள் ஆலய பரிபாலன
சபையின் பொருளாளர் கு. உதயகுமார், செயலாளர் வி.கிரிசாந்தன், குப்பிளான் தெற்கு மாதர் சங்கத் தலைவி திருமதி- ஜெயசக்தி சர்வானந்தன்
மற்றும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், அம்பிகையின் ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் புதிய இராஜ கோபுரத்துக்கான அடிக் கற்களை நாட்டி வைத்தனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen