வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த பெருந்திருவிழா.09.08.2016. செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நேற்றைய கொடியேற்றத் திருவிழாவில் யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இவர்களில் பலர் அங்கப்பிரதட்சணை செய்தும் அடியழித்தும் தமது நேர்த்திகளை நிறைவேற்றினர். பக்தர்களின் வசதி கருதி ஆலயத்தில் உள்ள கண்ணன் மடாலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. தாகசாந்தி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து செல்வதற்காக யாழ்ப்பாணம் - காரைநகர் இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இ.போ.ச, தனியார் பேருந்துகள்
ஆலயத்தினூடாக
சேவையை மேற்கொண்டன. தொடர்ச்சியாக இந்த சேவை இடம்பெறவுள்ளது. அடுத்துவரும் 18 தினங்கள் இடம்பெறவுள்ள இந்த பெருந்திருவிழாவில் எதிர்வரும் 25 ஆம் திகதி இரதோற்சவம் இடம்பெறும் -
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen