வெள்ளைக்காரப் பெண்கள்நல்லூர் திருவிழாவில் கலாசார உடையில்

யாழில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நேற்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
விநாயகப் பெருமானுக்கும், வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானுக்கும் விஷேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சுபநேரமான காலை- 10 மணியளவில் தவில், நாதஸ்வர முழக்கங்களுடன் கொடியேற்ற உற்சவம் வைபவம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகராக் கோஷம் எழுப்ப எம்பெருமான், விநாயகர், வள்ளி தெய்வயானை சமேதரராக உள்வீதி வலம் வந்து அருள்பாலித்தார்.
கொடியேற்ற உற்சவம் காண யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களிருந்தும் ஆயிரக்கணக்கான அடியவர்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் அடியவர்கள் மாத்திரமன்றி வெளிநாட்டு அடியவர்களும் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பாக வெள்ளைக்காரப் பெண்கள் சைவத் தமிழ் மக்களின் கலாசார ஆடையான சேலை அணிந்து வந்து நல்லூர்க் கந்தனைப் பக்திபூர்வமாக வழிபட்டமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
சைவத் தமிழ்க் கலாசாரத்தில் வெளிநாட்டவர்கள் ஆர்வம் கொண்டுள்ள நிலையில் எம்மவர்கள் வெளிநாட்டு மோகத்தில் ஊறித் திளைப்பது கவலையளிப்பதாக ஆலய உற்சவத்தில் கலந்து கொண்ட மூத்த ஆன்மீகவாதியொருவர் கவலை
 வெளியிட்டார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.