ஒவ்வொரு வீட்டிலும் லட்சுமி வாசம் செய்ய கீழ்காணும் முறைகளை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். * ஒருவர் தனக்கு சீராக அளிக்கப்பட்ட வெள்ளிப்பாத்திரங்களை விற்கவோ, அன்பளிப்பாக கொடுக்கவோ கூடாது. ஏழு வெற்றிலை, பாக்கு, திருநீறு, ஆடை, பொன் போன்றவற்றை இரு கரங்களால் ஏற்க வேண்டும். வளையல், சீப்பு, கண்ணாடி, கண் மை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை தேங்காயுடன் முறத்தில் வைத்து தானம் அளிப்பவருக்கு, லட்சுமி விரும்பிய வரங்களை அளிக்கிறார். * பவுர்ணமி தோறும் மாலையில் குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து பால், பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து வணங்கிய பின்னர் இரவு உணவு உட்கொள்ள வேண்டும்..
ஒவ்வொரு வீட்டிலும் லட்சுமி வாசம் செய்ய, அதிகாலை எழுந்ததும் பின்புற வாசலை திறந்து வைத்து, அதன் பின் தலைவாசலை திறக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், நாம் செய்த பாவங்கள் விலகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen