முருகனுக்கு செவ்வாய்கிழமை விரதம் இருப்பது நல்லதா?

அங்காரகனுக்குரிய முதல் தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி.
இந்த தெய்வங்களுக்கு செவ்வாய் கிழமையில் விரதம் இருப்பது மிகவும் ஏற்ற நாட்களாக உள்ளது.
செவ்வாய் கிழமை முருகன் மற்றும் சக்தி தேவி தெய்வங்களுக்கு விரதம் இருப்பதால், பக்தர்களின் கவலைகள் விலகி, அவர்களின் வருவாய் 
அதிகரிக்க செய்கிறது.
அதுமட்டுமின்றி பொருளாதார நிறைவையும், தங்குதடை இல்லாத வாழ்க்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்புகளையும், மாபெரும் சக்தியையும் பொங்கி வருவதற்கு பக்தர்களுக்கு அருள் புரிகின்றது.
மேலும் அந்நாளில் விரதம் இருக்கும் பக்தர்கள் செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்று, தூய்மையான உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை 
செய்ய வேண்டும்.
கார்த்திகை அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய் கிழமைகளில் வீட்டின் பூஜை அறையின் நடுவில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் மற்றும் படத்தின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து 
ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும், ஆறு தீபமிட்டு ஆறுமுகனான முருகனை வழிபட்டு வந்தால், 
சீரும் சிறப்பும் வந்து சேரும்.
விரதத்திற்கு முன் விநாயகரை வழிபட்டு, முருகன் அன்னதான பிரியர் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கி வந்தால், முருகனின் முழு அருளும் பக்தர்களை நாடிவரும்.
செவ்வாய்கிழமை மற்றும் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள். ரத்த சம்பந்தமான நோய் இருப்பவர்கள், ஒன்பது வாரம் இல்லத்தில் விரதம் இருந்து 10 வது வாரம் பலன் தரும் பரிகார தலத்திற்கு சென்று வழிபட்டால், சீரும்
 சிறப்பாக இருக்கலாம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.