யாழ் நல்லூர்க்கந்தசுவாமி கோவில் வரலாறு

நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் தொன்மையை யாழ்ப்பாண வைபவமாலை,கைலாய மாலை மற்றும் ஈழத்தோடு தொடர்புடைய இலக்கிய நூல்கள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து
 தெரிந்து கொள்ளலாம். இக்கோவில்கள் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண
 இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள்
 வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. ஆனால்
 15ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி
 பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்த சிங்கள அரசின் பிரதிநிதியான பிற்காலத்தில் ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு
 என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்ட கோட்டை அரசனான ஸ்ரீ சண்முகப்பெருமாள் என்பவனால் இக்கோவில் கட்டப்பட்டதாக வேறு ஒரு கருத்தும் உண்டு. முன்னர் சிறிய கோவிலாக இருந்த இந்தக்கோவிலை தனது 
ஆட்சிக்காலத்தில் புவனேகபாகு பெருப்பித்துக் 
கட்டியிருக்கக்கூடும் என்பது வேறு ஒரு கருத்தாகும். யாழ்ப்பாணக் கச்சேரியில் 1882ம் ஆண்டு உருவாக்கபட்ட சைவசமயக் கோவில்கள் தொடர்பான பதிவேட்டில் கந்தசுவாமி கோவில் 'குருக்கள் வளவு' என்ற காணியில் கட்டப்பட்டுள்ளதென
 கூறப்பட்டுள்ளது.
 யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரில் இருந்த மிகப்பெரிய கோவில் இதுவென்பது போர்த்துக்கேயர்களுடைய குறிப்புக்களில் இருந்து அறியமுடிகிறது. யாழ்ப்பாண மன்னனான ஆரியச்சக்கரவர்த்திகளின் அரண்மணையை அண்டி பழைய கோவில் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.