கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ டிவிசன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று 29.01.2018 இடம்பெற்றது.
கணபதி வழிபாடுகளுடன் 7.30 மணி முதல் சுப முகூர்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் பி. திகாம்பரம் ஹெலிகொப்டர் மூலம் ஆலயத்துக்கு மலர் தூவி வழிபாடு செய்தார்.
அத்தோடு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வன் ஜீவன் தொண்டமான் ஆகியோர் வழிபாடுகளில்
கலந்து கொண்டனர்.
இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen