அருள்மிகு முத்துமாரியம்மன் மகோற்சவம் ஆரம்பம். 07.02.18

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மாசிமக மகோற்சவம் இன்று 7ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமகவுள்ளது.
அதனை முன்னிட்டு 07.02.2018. ஆம்.  திகதி காலை 7 மணிக்கு கஜ ஊர்வலம் சமய கலாசார நிகழ்வுகளுடன் தேவஸ்தானத்திலிருந்து பிரதான விதி வழியாகச் சென்று ராஜவீதி வழியாக வந்தடைந்ததும் காலை 11 மணியளவில் கொடியேற்ற வைபவம் நடைபெற்று விசேட பூசைகளுடன் பகல் மகேஸ்வர பூஜையும்நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு விசேட பூசை நடைபெற்று கொடியேற்றத் தேர்த் திருவிழா நடைபெறும். மாலை 5மணிக்கு தேவஸ்தானத்திலிருந்து மந்தண்டாவளை வழியாக பரமகுருசுவாமிமட பிள்ளையார் கோவிலுக்குச் சென்று தொடர்ந்து களுதாவளை ஸ்ரீ ஏழுமுகக் காளியம்மன் கோவிலுக்குச் சென்று மீண்டும் தேவஸ்தானத்தை வந்தடையும்.
இன்று 7ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் கொடியேற்றத்துடன் தினசரி பகல் இரவு உள்வீதி திருவுலாக்கள் நடைபெற்று மார்ச் 1ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெறும். அன்றைய தினம் காலை விசேட வசந்த மண்டப பூசை இடம்பெற்று பஞ்சரத பவனி இடம்பெறவுள்ளது.
மார்ச் 3ஆம் திகதி தீர்தோற்சவமும், 4ஆம் திகதி பூங்காவனத் திருவிழாவும் 6ஆம் திகதி வைரவர் பூசையும் இடம் பெற்று
 திருவிழா நிறைவு பெறும் என தேவஸ்தான அறங்காவலர் சபை தலைவர் விக்னேஸ்வரன் 
செட்டியார் தெரிவித்தார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.