திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக
 உள்ள திரு,திருமதி, தியாகராஜா  
(தேவன் தர்மா)..தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2018.இன்று 37வது வருட திருமண நாள்
காணும் தம்பதியினரை  அன்பு அம்மாஅன்புப்  பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்   
வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
37வது வருட ஆண்டுகால அனுபவத்தில் 
கடந்து வந்த பாதைகள்தான் எத்தனை..எத்தனை.. 
வாழ்க்கை வானில் சேர்ந்து 
பறக்க சிறகை விரிக்கும் 
வானம்பாடி பறவைகள் நீங்கள் ... 
வரும் காலமும், வரப்போகும் காலமும் 
சுற்றத்தோடும் நட்போடும் அமைய 
நம்பிக்கை சிறகுகள் முளைத்து 
வானம் தாண்டி பறந்து செல்லும் 
வெற்றி பறவைகள் நீங்கள் ... 
வெயில்,மழை , புயல் 
என எத்துனை இடர் வரினும் 
இன்முறுவல் மாறாத 
இன்முகத்தோடு 
எளிமையும் வளமையையும் 
சேர்த்து வாழ்வீராக ... 

உனக்காக உன்னவளும் 
உனக்காக உன்னவனும் 
என்று தொடங்கி 
நமக்காக நாங்கள் 
என்று நினைவு கூறும் 
இன்னாள், நன்னாள் 
பொன்னாள்... 
ஆம் இது உங்கள் திருமண நாள் ... 
கெட்டிமேளம்  முழங்க 
ஊர்கூட்டி விருந்து வைத்து 
ஐயும் பூதங்களையும் 
சாட்சியாக்கிய தருணங்கள் ... 
நினைவுகளை அசைபோடும் போதே 
எண்ணிலடங்க நினைவலைகள் 
அலைகடலென மனதின் 
ஓரத்தையும் மனிதர்களையும் 
தொட்டு செல்கிறது ... 
இன்பமோ துன்பமோ 
லாபமோ நட்டமோ 
இன்று போல என்றும் 
காதல் வானில் பறந்து செல்ல வாழ்த்தும் 
உறவுகள்  
உங்கள் வருகைக்காகவே 
கடைக்கண் சாயாது காத்திருக்கும்... 
இந்நாள் போல 
எந்நாளும் மலர 
வாழ்த்தும் உங்கள் உறவுகள் நண்பர்கள் 
....
என்றும் அன்புடன் வாழ்த்தும் நவற்கிரி. .கொம்  நிலாவரை .கொம்  நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் மற்றும் 
உறவு இணையங்களும் ,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர் அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்  வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம்
 நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை
 வேண்டிக்கொள்கிறோம்
. வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.