தீபாவளி அன்று செய்யப்படும் பூஜைகளில் லட்சுமி குபேர பூஜை மிகவும் விசேஷமமானதாகும்.பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது குபேரன் உருவானான். லட்சுமி தேவியின் அருளைப் பெற்ற அவன், வற்றாத செல்வத்துக்குச் சொந்தக்காரன் ஆனான்.
இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். லக்ஷ்மி பூஜை என்றால் இது பெண்களுக்கானது என்பது இல்லை. ஆண்களும் விரதம் இருந்து இந்த லட்சுமி குபேர பூஜையை செய்யலாம்.லட்சுமி குபேர பூஜை
செய்யும் முறை
தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜை செய்யப்போகும் அறையிலோ அல்லது பூஜையறையிலோ லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைக்க வேண்டும்.
பின் சுவாமி படங்களை பூக்களால் அலங்கரிக்க வேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள்,குங்குமம் இட்டு, ஸ்வாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத்
தனித்தனியாக வைக்க வேண்டும்.
நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும்.பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள்
பூசி, வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.
இவை எல்லாம் செய்தானப் பின்பு, லஷ்மிகுபேர பூஜை துவங்கும் முன் முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரை மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக
வைக்க வேண்டும்.
அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம்.விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி
வழிபட வேண்டும்.
ஸ்துதி தெரியாதவர்கள், ‘குபேராய நமஹ… தனபதியே நமஹ…’ என்று துதித்து, உதிரிப் பூக்களை பூஜைக் கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு
நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த
தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு.இந்தப் பூஜையை செய்வதற்கு அதிக நேரம் கூட ஆகாது. ஆனால் தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்தால்,மன சங்கடங்கள், காரியத்தடைகள், கடன் பிரச்னைகள் நீங்கும். நம் இல்லத்தில் செல்வமும்,உள்ளத்தில் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ஐதீகம்.
குபேர பூஜையன்று எதுவுமே செய்ய இயலாதவர்கள், பசு மாட்டிற்கு, ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும்,புண்ணியம் சேரும்.ஏனென்றால் பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான்
என்பது ஐதீகம்.
தீபாவளி அன்று தூய்மையான மனதுடனும், இறை நம்பிக்கையுடனும் குபேர பூஜை செய்து, குபேர சம்பத்தையும் லட்சுமி தேவியின்
அருளையும் பெறுவோம்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen