இலங்கையில் இலைமறை காயாக காணப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாட்டை கடந்த 20 வருடங்களாக ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகள் தன்னுடைய அயராத மன்றாட்டத்தினாலும், ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானால் கொடுக்கப்பட்ட தெய்வீக அருளினாலும் வெளிக்கொணர்ந்து இன்று இலங்கையின் அனைத்து பாகங்களிலும் ஸ்ரீ ராம வழிபாட்டுடன் கூடிய
ஆஞ்சநேயர் வழிபாடு உலகம் போற்றும் வகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.அனுமன் சர்வ தேவதைகளின் வடிவம். எல்லா தேவதைகளும் அவருள் அடக்கம். இராம நாம மகிமையினையும் தூய பக்தி மற்றும் ஞானத்தையும், உயர்ந்த பக்தி நெறி நின்ற
வாழ்வையும் உலகிற்கு எடுத்துக்காட்ட சாட்சாத் சிவபெருமானே அனுமனாக அவதரித்தார்.
ஸ்ரீ ராம பிரானின் தொண்டனான அனுமன் தான், இப் பூவுலகிற்கு இராம நாமத்தின் மகிமையை எடுத்துக்காட்டியவரும், சொன்னவருமாவார். இராம நாமத்தால் எதையும் வெற்றிகொள்ள முடியும் என்ற
உதாரணம் காட்ட நீலக்கடலை ராம நாம உச்சரிப்புடன் தாண்டி இலங்கையில் சிறைப்பட்டுக்கிடந்த சீதையன்னையைக் கண்டு, வெற்றியோடு திரும்பி ராமரின் ஆனந்தத்தையும், ஆலிங்கனத்தையும் பெற்றார். ஸ்ரீ ராமனுக்கு அனுமன் அணுக்கத் தொண்டன்.
ஸ்ரீ ராமனையன்றி பிறிதொன்றை சிந்தையாலும் தொடாத தூய பக்தன். எங்கெங்கெல்லாம் ராம நாம சங்கீர்த்தனம் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் ஆனந்தக்கண்ணீர் சொரிந்தபடி இரு
கைகூப்பி நிற்பவன் அனுமன்.
பூத பிசாசங்கள் முதலிய தீய சக்திகள் அனுமனின் பெயர் கேட்ட மாத்திரத்தித்திலேயே நடு நடுங்கி ஒழிந்து போகும்.கோரிய வரங்களை தடையின்றி தந்தருளும் அனுமன் எல்லா மதத்தவர்களாலும் வழிபடப்படுகின்ற ஒரு தெய்வம். அவரை வழிபடுவதால் எல்லாப் பிணிகளும் நீங்கி வாழ்வில் வெற்றி சேருமென்பதில் ஜயமில்லை. “புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், பயமற்ற மனோ உறுதி, உடற்பிணிகள் இல்லாமை, இவற்றுடன் உயர்ந்த நாவன்மையும் அனுமனை
வழிபடுவோருக்கு அமையும்.
அப்படி ராம நாமத்தை உச்சரிப்பவர்க்கு, ராமனை வழிபடுவர்களுக்கு தானே வந்து அருள் புரிகின்ற அனுமனுக்கு ஆலயங்கள், இலங்கையில் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாலயங்களில் கொழும்பு, தெஹிவளை போதிருக்காராம வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் உலகப் பிரசித்திபெற்ற ஆலயமாக விளங்குவது பெருமைக்கும், அருளுக்கும், புகழுக்கும், அற்புதத்திற்கும் உரியதாகும்.
இவ்வாலயம் அருள்மிகு ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளின் தனி முயற்சியாலும் பக்தர்களின் அயராத உழைப்பினாலும் முழுமூச்சுடன் குறுகிய காலத்தில் இலங்கையின் முதல் தனிப்பெரும் ஆஞ்சநேயர் ஆலயம் தெஹிவளையில் சிறப்புடன் நிறைந்த எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது
.இங்குள்ள மூலவர் ஆஞ்சநேயர் பஞ்சமுக வடிவுடன் நின்ற திருக்கோலமாக காட்சியளிக்கின்றார். அனுமந்தம், நரசிம்மம், வராகம், கருடன் இவை நான்கு திசைகளை நோக்கியபடியும் ஹயக்ரீவம் இம்முகம் மேல்நோக்கியும், பத்துக்கைகளுடன் ஆஞ்சநேயர் தரிசனம் தந்து, கோடி கோடி மக்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார்.
இவ்வாலயத்தின் வாயிலில் நோய்களை தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானாக அமர்ந்துள்ளதும் இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும். மற்றும் விநாயகர், நாகபூசணி அம்பாள், துர்க்கா, லக்சுமி , சரஸ்வதி, லிங்கேஸ்வரர், தனா கர்ஷன ல~;மி சகித குபேரர், ஸ்ரீ பால முருகன், ஆண்டாள், நவக்கிரகங்கள், சகல கிரக தோஷ நிவர்த்தி செய்யும் ஆஞ்சநேயன், ஸ்ரீ வைரவர் பரிவார மூர்த்திகளாகவும் உற்சவ மூர்த்திகளாகவும்
அமைந்துள்ளனர்.ஸ்ரீ இராமர், சீதா, லட்சுமனர், ஆஞ்சநேயர் இவர்களை மூலஸ்தான
பஞ்சமுக ஆஞ்சநேயர் நோக்கியபடி நிற்பது ஒரு சிறப்பாகும். மூலஸ்தானத்திற்கும் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்திக்கும் இடையே யாககுண்டம் அமையப் பெற்றுள்ளது. ஆலய மூல மூர்த்தி ஆஞ்சநேயராக இருக்கின்ற போதிலும் அனைத்துத் தெய்வங்களுக்கும் உரிய சிறப்புப் பூஜை, விரதங்கள் இங்கே அனுஷ்டிக்கப்படுவது மேலாகக்
குறிப்பிடத்தக்கதாகும்.
ஆலயம் வரும் பக்தர்களின் மனம் மகிழும்படியும், மனநிறைவு கிடைக்கும் படியும் இப்பூஜைகள் அமைகின்றது.இக்கோயிலில் விநாயகருக்கான விநாயகர் சதுர்த்தி, விநாயகர் கதை ஆகிய
விரதங்களுக்கான சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அம்பாளுக்கு மாசி மகம், பங்குனித் திங்கள், ஆடிப்பூரம், ஆடிச்செவ்வாய், வரலட்சுமி பூஜை, நவராத்திரி,
கேதார கௌரி காப்பு பூஜை, ஆகியனவும், சிவராத்திரி பங்குனி உத்தரம் லிங்கேஸ்வரருக்கும், குபேர லக்சுமி பூஜை தீபாவளி நா
ளை ஒட்டியும் சிறப்புற நடைபெறும். தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை
தீபத்திருநாள், ஸ்கந்த ஷஷ்டி விரதம் முதலிய விசேட தினங்களுக்கான பூஜைகள் ஸ்ரீ பால முருகனுக்கும், மார்கழி திருப்பாவை, ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, ராமர் கிருஷ்ணருக்கும் சீராக நடைபெறும். சனிமாற்றம், வியாழமாற்றம் எனும் கிரக மாற்றப் பூஜைகள் சிறப்பு ஹோமத்துடன் நடாத்தப் பெறும்.
தேரடி வைரவர் மடை வருடத்திற்கு மூன்று தடவைகள் நிறைவாகச் செய்யப்படுகின்றது.ஒவ்வொரு ஞாயிறும் சகல தெய்வங்களுக்கும் பஞ்சாமிர்தத்துடன் கூடிய சிறப்ப அபிஷேகங்களும், போயா தினம் பௌர்ணமி நாள் கல்விக்கு
அதிபதியான ஸ்ரீ சரஸ்வதிக்கு மாணாக்கர்கள் தங்கள் கையால் பாலாபிஷேகம் செய்யும் வரப்பிரசாதமும் குறிப்பிட்டுக் கூறக்கூடியதொன்றாகும். அத்துடன் பௌர்ணமி மாலை நேரப்பூஜையைத் தொடர்ந்து பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்குப் பூஜையும் நடைபெறுகின்றது. ராகு தோஷ நிவர்த்திப் பூஜை செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.00 மணியின் பின்னர் ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் முன்னிலையில் நடைபெறும்.
இது தவிர இவ்வாலயத்தில் அமர்ந்துள்ள நவக்கிரக மூர்த்திகள் அனைவரும் ஒரே கோட்டு வரிசையில் தென் திசை நோக்கிய வண்ணம் தமக்குரிய வாகனங்களுடன் காட்சிதருகின்றனர். சூரியன் மத்தியாகவும், சூரியனது வலதுபக்கமாக முறையே திங்கள்,புதன்,குரு,சுக்கிரனும், இடது பக்கமாக முறையே செவ்வாய், சனி, ராகு, கேது அமர்ந்து இருப்பது இலங்கையில் இவ்வாலயத்தில் மட்டுமே.
கிரகங்களை நோக்கியபடி இரண்டடி உயரமான ஆஞ்சநேயப் பெருமான் கைகூப்பிய நின்ற திருக்கோலத்தில், அடியார்களுக்கு கிரகங்களால் வரும் துயர் நீக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். அவருக்கு மக்கள் தங்கள் கைகளால் (பெண்கள் தவிர) வெற்றிலை மாலையிட்டு வேண்டிய வரங்களையும் வாழ்வில் வெற்றியையும் பெற்று மகிழ்வெய்துகின்றனர்.இந்த ஆஞ்சநேயப்பெருமானுக்கு ஞாயிறு தோறும் நட
க்கும் அபிஷேகம் காண தொலைதூரத்திலிருந்து பக்தர்கள் ஆலயம் வருகின்றார்கள் இவ்வாலய ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளின் மன்றாட்டத்துடன் கூடிய இவ்வபிஷேகம் நீண்ட நேரத்தை எடுக்கும். பேய், பிணி, தோஷ நிவர்த்திக்காக அனுமன் முன்னால், இவற்றால் துயருறுபவர்களுக்கு நீர் தேகத்தில் ஊற்றி சுவாமி பக்தர் துயர்களை தீர்த்து அருள்வார்.
இவ்வாலயத்தில் ரசீது எடுத்து அர்ச்சனை செய்யும் வழக்கம் இல்லை. ஆலய பூசகர்களுக்கும் பூஜைக்காக தட்சணை கொடுக்கும் வழக்கமும் இல்லை. அனுமனை நினைந்து ஜம்புலன்களையும் அடக்கி “ஓம் ஸ்ரீ ராம ஜெயம்” என்று முடியுமானவரை சொல்லி மண்டியிட்டு தங்கள் பிரச்சினைகளை இறைவனுக்குக் கூறி வருந்தி முறையிட்டு, காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வழிபடுவது தான் பிரதான வழிபாடாக உள்ளமை
குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.
பூஜையின் போது அலங்கார தீபங்கள் உட்பட அனைத்து தீபங்களும் அழகாக, அவசரம் இல்லாமல் ஆறுதலாக தெய்வங்களுக்கு காட்டப்படுவது ஒரு சிறப்பாகும். ஓவ்வொரு தெய்வங்களுக்கும் நாமார்ச்சனைகள் நடைபெறும் போது அங்குள்ள பக்தர்களும் “நமஹ” என்ற உச்சரிப்பை சொல்லிக்கொள்வார்கள். இங்கு உயாந்த மணிக்கோபுரத்தில் கண்டாமணி கட்டப்பட்டுள்ளது.
தினமும் காலை 6மணி, காலைப்பூஜை ஆரம்பம் 8 மணி, உச்சிக்காலம் 12 மணி, சாயரட்சை 6 மணி இந்நேரங்களில் கண்டா மணி அடிக்கப்படும். மூன்றுநேரப் பிரசாதம் தினமும் பக்தர்களுக்கு
வழங்கப்பட்டு வருகின்றது.
தினமும் அர்த்த ஜாமப் பூஜை நிறைவு பெற்றபின் முறையே ஸ்ரீ ராமர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சக்தி, ஸ்ரீ சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கான மங்கள ஆரத்தி பாடல்களுடன் ஆராத்தி காட்டப்பட்டு, ஆசீர்வாதம் பிரசாதம் வழங்கப்படும்.
இவ்வாலயத்திற்கு ஒரு அவதார புருஷராக மிளிரும் ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகள் ஆஞ்சநேயரிpன் அவதாரமாகத் திகழ்வதில், மக்கள் தம் நோய் பிணி, வாழ்க்கைப் பிரச்சினை, பலதுயரங்களையும் சுவாமிகளுடன் உரையாடி, தங்கள் துயர் இருளிலிருந்து விடுபட்டு
மகிழ்வான வாழ்வு எய்துகின்றனர்.
சுவாமிகளின் சக்தியால் பல இன்னல்களில் இருந்து மீண்டவர்கள் ஆயிரம்! ஆயிரம்! சுவாமிகளின் தோற்றம் ஆஞ்சநேயரைப் போன்றே இருப்பது வியப்பானதே. நற்சிந்தனையுடன் ஆஞ்சநேயரை வழிபடுங்கள் மனத்தைரியத்தைப் பெறுவீர்கள், பலவித அனுகூலங்களையும் அடைவீர்கள் என்று கூறி ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமி அவர்கள் ஆஞ்சநேய வணக்கத்தை இலங்கை மக்களிடையே அறிமுகப்படுத்தி அவர்களுக்காக மன்றாடிப் பிரார்த்தித்து அவர்களது வாழ்க்கையில்
ஒளிவீசப் பண்ணினார்.
இவ்வாலயத்து விக்கிரகங்கள் அனைத்திற்கும் சுத்த வெள்ளியினால் ஆன கவச அங்கிகள் வார்க்கப்பட்டுள்ளன. விழாக்காலங்களில் நவக்கிரகங்களுடன் கூடிய சகல தெய்வங்களும் வெள்ளிக் கவசத்தில் காட்சிதருவது மனதில் மென்மேலும் ஆனந்தத்தையும் பக்திப்பரவசத்தையும் அளிக்கின்றது. மூலவர் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரின் கர்ப்பக்கிரகக் கோபுரத்தில் உலக சகலநாட்டுக் கொடிகள் நாட்டப்பட்டிருப்பது சகல நாடுகளிலும் வாழும் மக்களுக்கு அனுமனின் அருளும் ஆசியும் கிடைக்க வேண்டும் என்ற சுவாமிகளின் வேண்டுதலாக இருப்பது போற்றுதற்குரியதும்
வணக்கத்திற்குரியதுமாகும்.
பக்தர்களால் அன்பாக ஆஞ்சநேய சுவாமிகள் என்று அழைக்கப்படும் சுவாமிஜி அவர்கள் கடல்கடந்து சீதை அன்னiயின் துயர் தீர்த்த அனுமனைப்போல், இலங்கையை விட்டு வருடாவருடம் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆலயங்களில் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்து, மாறாத நோய் தீராத துன்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் சஞ்சீவி
ராஜனாக திகழ்கின்றார்.
இவ்வாலயத்திற்கு கடல் கடந்த நாடுகளில் இருந்து உல்லாசப் பயணிகளும், ஆன்மீக ஈடேற்ற யாத்திரிகர்களும் வருகைதந்து ஆஞ்சநேயர் பூஜை கண்டும் வழிபட்டும் நிறைந்த பக்தியுடனும், மனநிறைவுடனும் செல்வது அவர்களின் வதனங்கள் சொல்லும். குறிப்பாக வட இந்தியர்கள் அனுமனை வழிபடுவது ஆஞ்சநேயர் ஆலயத்தில் அவர்களின் எண்ணிக்கையற்ற வருகை உணர்த்துகின்றது. குழுக்களாகப் பிரிந்து இவ்வாலய தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.
இவ்வாலயத்தின் சிறப்பு அம்சங்களும், அற்புதங்களும், சுவாமிகளின் அற்புதங்களும் சக்தியும் உலகெங்கும் புகழ் பரவி நிற்கின்றது. ஸ்ரீ ராம நாமமும் ஓங்கி ஒலிக்கின்றது. துயர்களை நீக்கி வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் அனுமந்த ராஜனுக்கு பிரத்தியேக
அபிஷேகம் சங்காபிஷேகத்திற்கு இங்கு இயற்கை வலம்புரிச்சங்குகள் உபயோகிக்கப்படுகின்றது. எந்த ஒரு ஆலயத்திலும் இல்லாத ஒரு சிறப்பு இதுவாகும்.
ஸ்ரீ ஆஞ்சநேயர் எண்ணற்ற பக்தர்களை தம்பால் ஈர்த்துக் கேட்டவர்க்குக் கேட்டபடி இன்னருள் புரிகின்றார்.
நான் படும்பாடனைத்தையும் எனைப்படைத்த அந்த நான்முகன்தான் அறிவாரோ, அல்லது என் கணக்கை நாளும் பொழுதும் எழுதித்தள்ளும் சித்திரகுப்தன்தான் அறிவாரோ என்று ஏங்கித் தவிக்கும் எண்ணற்ற பக்தர்களுக்கெல்லாம் தஞ்சமென்றிருக்கின்றார் ஆஞ்சநேயமூர்த்தி. அவரின் அருளைத் துணையாகக் கொண்டு, நாடுவிட்டு நாடுசென்று வெளிநாடுகளில்வாழும் இளைஞார், யுவதிகள் எல்லோருக்கும் சரணாகதியாக இருப்பவரும்
ஆஞ்சநேயரன்றோ!
கடல்கடந்த நாடுகளிலிருந்து அவர்கள் ஆஞ்சநேயரை வாழ்த்துகின்றார்கள், வணங்குகின்றார்கள், வாரிவழங்குகின்றார்கள் ராம தூதனின் தூதனை – ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளை அவர்கள் நன்றிக்கடனோடு நினைவுகூறுகின்றார்கள்.
ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அதுவே ஆலயத்தின் பெருந்திருவிழா உற்சவ காலம். மற்றைய ஆலயங்களில் மூலவர் எந்ததெய்வமோ அந்த தெய்வத்திற்கு மட்டுமே பத்து தினங்களோ பதினைந்து தினங்களோ உற்சவம் நடைபெறும்.
ஆனால், அனுமன் ஆலயத்தில் முதல் நாள் கணபதி ஹோமத்துடன் ஆரம்பிக்கும் கணபதிக்குரிய திருவிழா மறுநாள் நவக்கிரகங்கள், தன்வந்திரி பஹவான், சிவன், விஷ்ணு, அம்பாள் வைரவர், முருகன், துர்க்கா லட்சுமி சரஸ்வதி குபேரர், ராமர் சீதா லட்சுமனர்
ஆஞ்சநேயர் இப்படி தினம் ஒரு பரிவார மூர்த்திகளுக்கு விழா எடுக்கப்படும். ஆஞ்சநேயப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் மார்கழி மூலம் ஆகும். அன்றைய தினமே உற்சவ முடிவுநாள், அதன் முதல் நாளே சித்திரத்தேர்த் திருவிழா உலகிலேயே இலங்கையிலேயே முதன் முதல் தேர் செய்யப்பட்டு(பெரு வீதி) நகர்வலம் வருவது இவ் ஆஞ்சநேயர் ஆலயத்தில் தான் என்ற பெருமை இவ்வாலயத்திற்கு சேரும்.
வருடா வருடம் இத்திருவிழாவின் ஆரம்ப நிகழ்ச்சியாக ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானின் பதியம் பெற்ற நுவரெலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயம் சென்று கொடிக்கம்பமும், தீர்த்தமும், மண்ணும் எடுத்துவரப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் சுபநேரத்தில் நாட்டப்பட்ட பின்பே இவ்வாலய வருடாந்த ஜெயந்தி விழா உற்சவம்
ஆரம்பிக்கும்.
ஜந்து முகம் கொண்ட கலையழகு மிகு ஆஞ்சநேயன் நடுநாயகமாக வீற்றிருந்து அருள் புரிய, அவர்தம் அடியார்கள் ராம நாம ஜபத்துடன் வலம் வர திருத்தேரில் பக்தர்களின் வாயிலில் சிறப்புற
நின்று அருள்பாலிக்கின்றார் ஸ்ரீ ஆஞ்சநேயர். சிரஞ்சீவி ஆஞ்சநேயனை மன்றாடி மன்றாடி சுவாமிஜி முன்னால் வர பக்தர்கள் வடம் பிடிக்கும் இத்தேர்த்திருவிழாவை காண கண்கள் கோடி வேண்டும் என்றால் மிகையாகாது.
ஆரம்ப மூர்த்தியான எழுந்தருளி ஆஞ்சநேயருடன் திருத்தேரிலே விநாயகர் சகிதம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் 12 தினங்கள் கிரமமாக சமயாசாரியர்களின் விசேட புரோகிதத்தை ஈர்த்து அடியார்களுக்கு சோருதல் இல்லாமல் கேட்டன அருள வீதி வலம் வருகின்றார்.
அதற்கு அடுத்த தினமான காலை கடல் தீர்த்தத்துடன் ஆரம்பித்து காலை 409 வலம்புரிச்சங்குகளினால் மூலவர் ஸ்ரீ ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயப்பெருமானுக்கு அபிஷேகம்
நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து உச்சிக்காலப் பூஜை விஷேடமாக நடைபெறும். மாலை 5.00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு விசேட வடைமாலை அலங்காரம் இடம்பெறுவதோடு, இவ்ஜெயந்தி விழாவின் நிறைவு நாளில் உலகெங்குமுள்ள ஸ்ரீமத் சுவாமிஜியின் அடியார்கள் செய்யும் “குருபாத பூஜை“ குரு வழிபாடாகவும் அமையப்பெறுவது சிறப்பம்சமாகும். அதனைத்தொடர்ந்து திருவூஞ்சலுடன் உற்சவ அருட்காட்சி
நிறைவுபெறும்.
இலங்கையின் பலபாகங்களிலிருந்தும், இந்து மதத்தவர் மட்டுமன்றி பல்வேறு மதங்களையும், பல்வேறு இனங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தகோடிகள் வருடா வருடம் நடைபெறும் இப்பெருவிழாவில் பங்குகொண்டு நினைத்ததை அடைந்து பேரானந்தம் அடைகின்றார்கள்.
பலவிதத்திலும் வித்தியாசமான, அதிசயமான, அழகான அருள்நிறைந்ததான ஆலயமாக விளங்குவது இந்த கொழும்பு,தெஹிவளை ஸ்ரீ ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயமாகும்.
படி ஏறிதன் பதம் தேடி வந்த பக்தர் குறை தீர்த்து அனுப்பும், அபயக்கரம் “அஞ்சேல்/ என்று மொழிய ஆசி கூறி நிற்கும் அனுமன் பதம் பணிவோம். அவன் அருளால் அவனியில் அனைத்தையும்
பெற்று வாழ்வோம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen