முருகப்பெருமானுக்கே உரிய கந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பமாகியுள்ளது. அந்த விரதத்தை எப்படி கடைப்பிடிக்கவேண்டுமென விபரிக்கிறது இந்த தொகுப்பு.தீபாவளி அமாவாசைக்கு மறுநாள், பிரதமை
முதல், கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு,
காலையும் இரவும் பட்டினியாக
இருத்தல் வேண்டும். இந்த நாட்களில்துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.மௌன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு.
மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடவேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்வது விசேஷம்.இந்த
ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகலும். சுபிட்சம் குடிகொள்ளும்.ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று, முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து,
ஏழாம் நாள் காலை
அன்னதானம் செய்து, விரதத்தை முடிக்க வேண்டும்.ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும், பொருளும் கிடைத்து ஞானத்துடனும்
யோகத்துடனும் வாழலாம்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen