திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகா கார்த்திகை தீபத்திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா வந்தார்.
அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா டிசம்பா் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும் காலையில் விநாயகா், சந்திரசேகரா் உற்சவா் சுவாமிகள் வீதியுலாவும், இரவில் பல்வேறு வாகனங்களில் உற்சவா் பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும்
நடைபெற்று வருகிறது.
தீபத் திருவிழாவின் நான்காம் நாளான நேற்று காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அருணாசலேஸ்வரரும் வீதியுலா வந்தனா்.
இதைத்தொடர்ந்து, தீபத் திருவிழாவின் 5-ம் நாளான
05.12.19.காலை 10 மணிக்குமூஷிக வாகனத்தில் விநாயகா், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலா நடைபெற்றது. இரவு 9.00 மணிக்கு வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரா், வெள்ளி சிறிய ரிஷப வாகனத்தில் பராசக்தியம்மன் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற உள்ளது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen