தயவு செய்து கோவிலுக்கு செல்லும் போது இதையெல்லாம் செய்துவிடாதீர்கள்

கோவிலுக்கு செல்லும் போது ஒருசில செயல்முறைகளை கட்டாயம் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.ஏனெனில், நாம் அவ்வாறு செய்யும் போது, கடவுளுக்கு செய்யப்படும் பூஜையின் முழு பலனும் நமக்கு கிடைக்கும்.கோவிலுக்கு செல்லும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் 
தெளிக்க வேண்டாம்.
கோவிலுக்கு போகும் போதோ அல்லது வரும் போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்லக் கூடாது.கோவிலுக்கு குடும்பத்தோடு செல்வது நல்லது. ஆனால் இஅதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.கோவிலுக்கு செல்வதற்கும் 24 மணி நேரத்திற்கு முன் அல்லது பின் அசைவ உணவு, மது மற்றும் மற்ற 
விஷயங்களிலும் கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் அவசியம்.கோவிலுக்கு செல்ல யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த கடன் பூஜைக்கு என்று சொல்லி வாங்கக் கூடாது.கோவிலுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
கோவிலில் சுவாமி தரிசனம் சிலமணி நேரம் தாமதமானால், அதற்கு முன் பன் டீ பிஸ்கட் காபி ரஸ்க் டிரை ப்ரூட்ஸ் கூல்ட்ரிங்ஸ் போன்ற ஸ்லைட் ஃபுட் போன்றவை சாப்பிடலாம்.
பரிகாரம் யாருக்கு செய்யப்படுகிறதோ அவர்கள் தான் அந்த பரிகாரத்தை முன் நின்று கடவுளை வணங்கி செய்ய வேண்டும்.கோவிலுக்கு செய்யும் பூஜைக்காக தாங்களின் நேரம் மற்றும் பணத்தை செலவழிப்பது பெரிய தவறல்ல. ஏனெனில் கனிந்த, தாழ்ந்த, முறையான பக்திகள் தான் அதற்கான பலனை நிர்ணயம் செய்கிறது.
கோவிலுக்கு செய்யப்போகும் முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. மேலும் பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்தால் நல்லது
.பொழுதுபோக்கிற்காக சுற்றுலா செல்லும் போது கோவிலுக்கு செல்லக் கூடாது. ஏனெனில் அதனால் எவ்வித பலனும் இல்லை.கோவிலுக்கு சென்று பூஜை செய்யும் போது, தன்னால் முடிந்ததை செய்தாலே போதும். அதற்காக கடன் வாங்கி செய்வது பலனை தராது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.