இந்துக்களினால்உலகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தைப்பூசம்.08.02.20

இன்றையதினம் உலகில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.அந்தவகையில் ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயம், செல்வச்சன்னதி முருகன் ஆலயம், மண்டூர் முர்கன் ஆலயம், தன்பகுதியில் உள்ள கதிர்காம ஆலயத்திலும்
 தைப்பூச தினம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.இந்நிலையில், நம் தமிழ் கடவுளான முருகனுக்கு நமது நாட்டில் மட்டுமல்லாமல் அயல் நாடுகளிலும் ஆலயம் எழுப்பி தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை
 சேர்த்துள்ளனர் நம் தமிழர்கள் .சரவணபவ என்ற ஆறு எழுத்துக்களை உடையவன் அழகன் முருகன். சரவணபவ என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்று
 பொருள்படும்.ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்வீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்ற பொருளில், மங்களம், ஒலி கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் முருகன் என்றும் 
அறிஞர்கள் கூறுவர்.
அந்தவகையில் மலேசியா முருகன் கோவிலும் தைப்பூச நிகழ்வுகள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியால் உள்ள உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமையப்பெற்றுள்ள மலேசியா பத்துமலை முருகன் கோவிலிலும் தைப்பூசம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.கோலாலம்பூரிலிருந்து 
சுமார் 13 கி.மீ. தொலைவிலுள்ளது பத்து மலை . இது ஒரு மலைக்கோவில்; சுண்ணாம்புப் பாறைகளாலான மலை இது. வரிசையாக அமைந்த குகை அல்லது குகைக் கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது.பத்துமலைக் கோவில் 
தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது.
சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. 
சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள்.கோவிலின் நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப்பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இந்த முருகன் 
சிலைக்கு 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டது. மிகப்பெரிய வேல் வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி
 கொண்டது. இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது இந்த சிலை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் தைப்பூசம்:சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச்சிறப்பாககொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா அங்கு களைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் 
லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்றவர் பெருந்திரளாக
 தேரினை இழுத்துச் செல்கிறார்கள். அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறை வேற்றுவார்கள். சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
ஈழத்தில் தைப்பூசம்:நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது.நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண ராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்ததாக நல்லூர் கந்தசுவாமி கோவில் அறியப்படுகிறது.
தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புதிர் எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை 
வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 
அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை அடியவர்கள் நிறைவேற்றுவர்.
கதிர்காமம் முருகன் கோவில்:கதிர்காமன் கந்தன் கோவிலுக்கு இலங்கை வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியா உள்பட உலக நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கும் புனித தலம்.இங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காமயாத்திரை என்பர் மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது. கோயில் சிறிது 
ஆனால் மகிமை பெரிது .
வானளாவிய கோபுரங்களையும் கலைக்கூடங்களையும் இக்கோயில் கொண்டதல்ல. சாதாரண செங்கட்டிக் கோயில் 50 அடி நீளம் கொண்ட ஓட்டுக்கூரை 20 அடி அகலம், 15 அடி உயரம் மூன்று மண்டபங்கள் போன்ற அறைகள். தெற்கு நோக்கிய பெரிய மண்டபத்தில்
 பக்தர்கள் நின்று வழிபடுவர் தென் திசை நோக்கிய கோயில்.இந்த கோவலில் உள்ள ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரமரகஸ்யமான பவித்திரமான இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, 
துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. ‘
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி, அருவமும் உருவமுமாகி, அநாதியாய், ஒன்றாய், பலவாய், பிரம்மமாய் நின்ற சோதி, பிளம்பதோர் மேனியாகி, மருவுகதிர்காமப் பெருமாளாக யந்திரத்தில் ஆவாகனம் செய்யப்பட்டு மூலஸ்தானத்திலிருந்து
 பக்தகோடிகளை ரட்சிக்கிறான்.
பினாங்கு தைப்பூசம்:மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். 

இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியன் கோவில்:மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது .மொரீஷியசில் தைப்பூசம்:சுப்பிரமணியருக்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள்
 இங்கும் உண்டு.
ஆஸ்திரேலியாவில் (விக்டோரியா) தைப்பூசம்;இலக்கம் 52, பவுண்டரி ரோடு, கெண்டம் டௌன்ஸ், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் இந்து கழகத்தின் சார்பில் தைப்பூசம் விழா நடைபெறுவது உண்டு. சுப்பிரமணியனுக்கு அபிஷேகம், தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். பக்தர்கள் 
பால்குடம் எடுக்கிறார்கள். பிரசாதம் மற்றும் அன்னதானம் என்று எல்லாம் உண்டு.இன்றையதினத்தில் தமிழ்கடவுளாகிய அழகன் முருகனை நினைந்து அவரின் பாடல்களை பாராயணம் செய்வது 
மிகவும் விசேசமாகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.