எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை கொண்டு ராம பிரானுக்கு படைத்து வணங்கினால் நல்லது என்று உங்களுக்கு தெரியுமா?மேஷம்:மேஷ ராசிக்காரர்கள் மாதுளை அல்லது லட்டுவை ஸ்ரீராமருக்குப் படைத்து வழிபட்டால், இதுவரை வாழ்வில் நீங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் உடனே விலகும்.ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்கள்
ஸ்ரீராம நவமி அன்று ரசகுலாவை ஸ்ரீராமருக்கு வைத்து படைத்து வணங்கினால், செல்வ வளம் அதிகரிக்கும்.மிதுனம்:மிதுன ராசிக்காரர்கள், ஸ்ரீராம பிரானுக்கு முந்திரி பர்பியைப் படைப்பதுடன், அதை பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவது
மிகவும் நல்லது.
கடகம்:கடக ராசிக்காரர்கள், தேங்காய் பர்பி அல்லது மேவா பர்பியை ஸ்ரீராமருக்குப் படைத்து வணங்கினால், இதுவரை உங்களின் செயல்களுக்கு தடையாக இருந்த அனைத்தும் நீங்கும்.சிம்மம்:சிம்ம ராசிக்காரர்கள், வெல்லத்தை ஸ்ரீராமருக்கு படைத்து வழிபட்டால், இனிமேல் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும்.கன்னி:கன்னி
ராசிக்காரர்கள் பேரிக்காய் அல்லது ஏதாவது பச்சை நிற பழங்களை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்கினால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.துலாம்:துலாம் ராசிக்காரர்கள்,
ஆப்பிளை ஸ்ரீராம நவமி அன்று ராமருக்கு படைத்தால், ராம பிரானின் முழு அருளையும் பெறலாம்.விருச்சிகம்:விருச்சிக ராசிக்காரர்கள் எள்ளு உருண்டையை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்குவதன் மூலம், வாழ்வில் உள்ள பிரச்சனைகள்
அனைத்துமே அகலும்.
தனுசு:தனுசு ராசிக்காரர்கள் கடலை மாவால் ஆன இனிப்பு பலகாரத்தை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்கினால் நல்ல விஷயங்கள் நடக்கும்.மகரம்:மகர ராசிக்காரர்கள் நாவல் பழம் அல்லது கருப்பு திராட்சையை ஸ்ரீராம நவமி அன்று ராமருக்கு படைத்தால், வாழ்வில் ஓரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.கும்பம்:கும்பம் ராசிக்காரர்கள்
சப்போட்டா அல்லது சாக்லேட் பர்பியை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்கினால், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.மீனம்:
மீனம் ராசிக்காரர்கள் ஸ்ரீராம நவமி அன்று, ஜிலேபி அல்லது வாழைப்பழத்தை ஸ்ரீராம பிரானுக்குப் படைத்து வணங்கி, பிரசாதமாக அனைவருக்கும் வழங்கினால் அவர்களின்
வாழ்வில் நல்லதே நடக்கும்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen