சைவப் பெருமக்களால் மகிமை மிக்க சிவ விரதமான மகா சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு உலக சைவத்திருச் சபையின் ஏற்பாட்டில் திருக்கேதீஸ்வர திருத்தலப் பாதயாத்திரை வெள்ளிக்கிழமை(14.02.2020) காலை சைவசமய எழுச்சியுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து
புறப்பட்டுச் சென்றுள்ளது.உலக சைவத்திருச் சபையின் இலங்கைக்கான தலைவர் கதிர் குமாரசாமி சுமுகலிங்கம் சிவாச்சாரியார் தலைமையில் ஆரம்பமான
இந்தப் பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளவர்கள் திருமுறை, திருவாசகம் பண்ணுடன் ஓதியவாறு கலந்து கொண்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை (12) காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான குறித்த பாதயாத்திரை நேற்று வியாழக்கிழமை மாலை நல்லை ஆதீனத்தை வந்தடைந்தது
. இந்நிலையில்,
இன்று காலை-07.45 மணியளவில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் கலந்து
கொண்ட பாதயாத்திரைக் குழுவினர் பின்னர் ஆலய முன்றலில் தேங்காய் உடைத்து வழிபாடுகளையும் மேற்கொண்டதுடன்
அதனைத் தொடர்ந்து நல்லூர்த் தேரடியை வலம்
வந்தனர். அதனைத் தொடர்ந்து
திருவண்ணாமலையிலிருந்து
எடுத்து வரப்பட்ட சிவலிங்கம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட ஊர்திப் பவனியுடன் கூடிய பாதயாத்திரைக் குழுவினர் காலை- 08.30 மணியளவில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து
திருக்கேதீஸ்வரம்
ஆலயம் நோக்கித் தமது பாதயாத்திரையை ஆரம்பித்தனர். குறித்த பாதயாத்திரை கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படுவதுடன், செல்லும் வழியில் இந்து ஆலயங்களைத் தரிசித்தவாறு குறித்த பாதயாத்திரைக் குழுவினர் மகாசிவராத்திரி நன்னாளான எதிர்வரும்-21 ஆம் திகதி காலை திருக்கேதீஸ்வர ஆலயத்தைச் சென்றடையவுள்ளமையும் இங்கு
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen