பேட்டைவாய்த்தலை
கருப்பை நோய்கள், மாதவிடாய் பிரச்னைகள் எல்லாம் தற்காலத்தில் பல பெண்களை வேதனைப்படுத்தும் உபாதைகளாக உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு மட்டுமே ஏற்படக் கூடிய உடல்நலக் கோளாறுகளை தீர்த்து அருளும் ஆலயம் ஒன்று உள்ளது. திருச்சி
அருகேயுள்ள பேட்டைவாய்த்தலை ஆலயம்தான் அது. இத்தல இறைவன் மத்யார்ஜுனேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பாலாம்பிகை. பிரம்மஹத்தி தோஷத்தை
நிவர்த்தி செய்யவும், குழந்தை பேறின்மையைத் தீர்க்கவும் மூன்றாம் குலோத்துங்க
சோழனுக்கு அசரீரி ஒன்று இட்ட கட்டளையின் விளைவுதான் இக்கோயிலும் அதனருகே உள்ள
தீர்த்தமும் அமைந்ததாக சொல்கிறார்கள்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen