தமிழ் சார்வரி வருடம் பிறக்கும் போது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு
தமிழில் வீறியெழல் என்று பெயர்.
தமிழ் சார்வரி புத்தாண்டில் குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது தொட்டதொட்டதெல்லாம் பொன்னாகக்போகிறது. இது பொதுவான பலன்தான். ஜாதகத்தில் கிரகங்கள் சேர்க்கை, தசாபுத்தி நடப்பதை பொருத்து பலன்கள் மாறுபடலாம்.
ஆண்டு கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் சாதமான நிலையில் உள்ளது. சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். குருவும் அதிசாரமாக சென்றாலும் பின்னர் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆவணியில் மிதுனம் ராசியில் இருந்து
ராகு ரிஷபம் ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி மார்கழி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த
கிரகங்களின் சஞ்சாரம் பார்வை பல ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்களை தரப்போகிறது.
சார்வரி வருடம் பிறக்கும் போது மூலம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் தனுசு ராசி, துலாம் லக்னத்திலும், நவாம்சத்தில் கடகம் ராசி, கும்ப லக்னத்திலும், புதன் ஓரை, கேது மகா தசை சனி புத்தியில் பிறக்கிறது. புத்தாண்டு தொடங்கும் போது உங்கள் ராசிக்குள் சந்திரன், கேது,
இரண்டாம் வீட்டில் குரு, சனி, செவ்வாய், நான்காம் வீட்டில் புதன் ஐந்தாம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். ஆறாம் வீட்டில் சுக்கிரன் எட்டாம் வீட்டில் ராகு என கிகரகங்கள் சஞ்சாரம் உள்ளது.
கவலைகள் தீரும் விகாரி ஆண்டில் ஏகப்பட்ட இன்னல்களை சந்தித்து
வந்த தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி வருடம் சங்கடங்கள் தீரும் ஆண்டாக இருக்கப் போகிறது. நீங்க தொட்டதெல்லாம் பொன்னானும் நினைத்தது பலிக்கும். நல்ல பண வருமானம் வரும். உங்க குடும்ப வாழ்க்கையில் கவுரவம் வரும். உங்களுக்கு ஏற்பட்டு வந்த பொருளாதார
நெருக்கடிகள் விலகும். கடன் பிரச்சினைகள் தீரும். கவலைகள் விலகும். சுப காரியங்கள் நடக்கும் இந்த ஆண்டு
உங்களுக்கு சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். திருமண சுப காரியங்களும் கை கூடி வரும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதே என்ற கவலைப்பட்டுக்கொண்டிருந்தீர்கள். படிப்படியாக உங்க பிரச்சினைகள் தீரும். குடும்ப ஒற்றுமை
அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும். ஏழரை சனி ஜென்ம சனியில் இழந்த கௌரவத்தை திரும்ப பெறுவீர்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.
கால்களில் கவனம் ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது. கால் வலிகள் வரலாம் கவனமாக இருங்க. சனிபகவான் வக்ரமடைந்து சில மாதங்கள் கழித்து பின்னர் மீண்டும் நேர்கதியில் செல்வார். வெளிநாடுகளில் வேலை செய்தவர்கள் பலர் வேலை இழந்து தவிக்கிறீர்கள். கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் தேடி வரும். உழைப்பு அதிகரிக்கும் அதற்காக கவலைப்படாதீர்கள்.
பண வரவு சிறப்பு பெண்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நோய்கள் உங்களை பாடாய் படுத்தி வந்தது இனி பிரச்சினை இல்லை. உங்களுக்குஇருந்த நோய் பயம் நீங்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வமும் அக்கறையும் காட்டுங்கள் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளலாம். நல்ல
மதிப்பெண்களை வாங்குவீர்கள்
கணவன் மனைவி ஒற்றுமை கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். நீங்க
இழந்த செல்வம் செல்வாக்கினை மீண்டும் பெற தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். கந்த சஷ்டி கவசம் படிங்க நோய் பயம் நீங்கும்
சார்வரி வருடம் தமிழில் வீறியெழல் என்ற பெயர் கொண்ட வருட பிறப்பு
• ஐரோப்பா நேரம் ( Europe Time) 13 April 2020 15:56 மணிக்கு
வருடம் பிறக்கிறது
விஷு புண்ணிய காலம்:
• 13 சித்திரை- 2020 திங்கட்கிழமை முற்பகல் 11:56 முதல் 19:56 வரை
கைவிஷேட சுப நேரம் :
• 13 சித்திரை- 2020 திங்கட்கிழமை 16:11 மணி முதல் 17:30 வரை
• 13 சித்திரை-2020 திங்கட்கிழமை 18:10 மணி முதல் 19:00 வரை
அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரை புதுவருட சார்வரி வருட நல்வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen