13/04/2020 திங்கள்கிழமை வாக்கியபஞ்சாங்கம் இரவு 7.26, திருகணித பஞ்சாங்கம் இரவு 8.23.மருத்து நீர் வைத்து ஸ்நானம் செய்யும் விஷு புண்ணியகாலம், பிற்பகல் 3.26 முதல் இரவு11.26வரை. சுபநேரம்14/04/2020 செவ்வாய்க்கிழமை அதிகாலை (1) 5.00
முதல் 6.00வரை.
தற்போதையசூழ்நிலையில் கிடைக்கக்கூடியதை மட்டும் வைத்து )நிறம் -சுத்தமான வெண்ணிறஆடை,தரிசனம், நிறைகுடம், கண்ணாடி, தீபம், வலது உள்ளங்கை, பூக்கள், பழவகை, மஞ்சள், குங்குமம், சந்தணம், வெற்றிலை, பாக்கு, பணம்வணங்கி ஆசிபெறவேண்டியது தாய், தந்தை,குரு (எப்போதுமே),மருத்து நீரை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் மருத்து நீருக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது தலையில் வைத்து நீராட முடியும்.
தாழம்பூ, தாதுமாதுளம்பூ, தாமரைப்பூ, துளசி, வில்வம், அறுகம்புல்,பால்,கோசலம், கோமயம்,கோரோசனை,குங்குமப்பூ, பச்சைகற்பூரம், மஞ்சள், சுக்கு,
திற்பலி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார்செங்கழுநீர் (இவற்றை சுத்த ஜலத்தில் இட்டு காச்சிய கஷாயமே மருத்து நீராகும்) ஏதாவது மூன்றை மட்டுமாவது கிடைத்தால், காச்சி எடுத்துக்கொள்ளலாம்.
கைவிஷேசம் வீட்டிலுள்ளவர்களுக்கு தந்து மகிழ 14/04/2020 5.20- 5.50 AM. (20/04/2020 12.06-1.46 PM) நாம் மிக அவதானமாக இருக்க வேண்டிய தருணமிது. ஆகவே,தனித்திருப்போம்,விழித்திருப்போம்,
வீட்டிலிருப்போம்.
அனைவருக்கும் இந்த இணையயங்களின் இனிய
தமிழ்சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen