இன்று பணப்பிரச்சினை பலரையைம் வாட்டி வதைத்து கொண்டு வருகின்றது. இதற்காக பலர் என்ன செய்வது? என்று அறியாமல் தினமும் புலம்பி கொண்டு இருப்பதுண்டு. இதற்கு ஆன்மீகத்தில் பல
பரிகாரங்கள் உண்டு. இந்த பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தாலே போதும் கை மேல் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.அந்தவகையில் தற்போது ஆன்மீகப்படி நம் வீட்டில் அதிகப்படியான பணம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி இங்கு
பார்ப்போம்.செம்பு டம்ளரில், முதலாவதாக 2 டேபிள்ஸ்பூன் அளவு கல்லுப்பு, 2 டேபிள்ஸ்பூன் அளவு நாட்டுச் சர்க்கரையோ,
சர்க்கரையோ அல்லது வெல்லமும் போட்டுக்கொள்ள வேண்டும்.அதன் பின்பு பச்சரிசி 2 கைப்பிடி அளவு, அதன்மேல் ஐந்து
ரூபாய் நாணயம் ஒன்று இப்படியாக, தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதில் போடப்படும் அளவுகள் உங்களுடைய இஷ்டம்தான். பச்சரிசியை மட்டும் இரண்டு கைப்பிடி அளவு
போட்டுக் கொள்ளுங்கள்.இதை எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் செய்யலாம். குறிப்பாக வியாழக்கிழமை
செய்வது நல்ல பலனைத் தரும்.நீங்கள் தயார் செய்த இந்த செம்பு பாத்திரத்தை உங்கள் வீட்டு
பூஜையறையில் மகாலட்சுமிக்கு முன்பாக வைத்து விடவேண்டும்.எந்தக் கிழமையில் நீங்கள் இத தொடங்குவீர்களோ, அந்தக் கிழமையில் இருந்து ஒரு வாரம் கழித்து, அதாவது ஏழு நாட்கள் கழித்து, இந்த பொருட்களை எல்லாம் புதியதாக மாற்றி வைக்க வேண்டும்.பழைய பொருட்களை
காக்கை குருவிகளுக்கு உணவாக போட்டுவிடலாம்.வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், அடுத்த வியாழக்கிழமை பழைய பொருட்களை மாற்றி விட்டு, புதிய பொருட்களை
வைக்கலாம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen