வரலாற்றுச் சிறப்பு மிக்க அலைகடல் நடுவே அருளாட்சி புரியும் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் முத்தேர் வீதியுலா.03-07-20. இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக
இடம்பெற்றது.
இன்று அதிகாலை அபிசேக பூஜைகளுடன் ஆரம்பமாகி அதிகாலை-05.30 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து காலை-06.45 மணியளவில் சித்திரத் தேருக்கு அம்பிகை, விநாயகர், வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான் ஆகிய முத்தெய்வங்களும் எழுந்தருளினர்.
சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டுத் தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை-07 மணியளவில் முத்தேர் வீதியுலா ஆரம்பமானது.
பல நூற்றுக்கணக்க்கான அடியவர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகிய முத்தேர் வீதி உலா காலை-08 மணியளவில் இருப்பிடத்தை
வந்தடைந்தது.
இதேவேளை, கொரோனா நோய் நிலைமையைக் கருத்திற் கொண்டு தேர், சப்பற திருவிழாக்கள் எதுவும் இடம்பெறமாட்டாது என முன்னர் தெரிவிக்க்கப்பட்டிருந்த போதும் இன்றைய தேர்த் திருவிழா சிறப்பாக நிறைவேறியுள்ளமையும் இங்கு
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen