ஆத்மநாத சுவாமி உருவ வழிபாடு இல்லாத கோயில்

அறந்தாங்கியிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள தலம் ஆவுடையார் கோயில். திருவாசகம் தந்த மாணிக்க வாசகரால் கட்டப்பட்ட கோயில் இது. தேவாரத்தில் இத்தலம் 'திருப்பெருந்துறை' 
என அழைக்கப்படுகிறது. திருவிளையாடல் புராணத்தில் இடம்பெறும் நரிகளைப் பரிகளாக்கிய விளையாடல் இந்தக் கோயிலோடு தொடர்புடையது. தெற்கு நோக்கி உள்ள
 இக்கோயிலில், ஆத்மநாத சுவாமி,
 யோகாம்பாள் உள்ளிட்ட எந்த தெய்வத்துக்கும் உருவ வழிபாடு கிடையாது. கொடிமரம், நந்தி போன்ற வழக்கமான 
அம்சங்களும் இங்கில்லை. தினமும் நைவேத்யத்திற்கு புழுங்கல் அரிசி சாதம் சமைக்கப்பட்டு அதிலிருந்து வரும் 
ஆவியை மட்டும் சுவாமிக்கு அர்ப்பணிக்கின்றனர். அத்துடன் பாகற்காயும், 
கீரையும் படைக்கப்படுகிறது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.