யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா .17.08.20


 யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில்
.வெகு விமர்சையாக 17-.08.-2020 இன்று குறிப்பிடத்தக்க  பக்தர்கள் வருகைத் தந்துள்ளார்கள்.

உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று ஆலயத்தில்  காணக்கூடியதாக உள்ளது.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுவதோடு, 24ஆம் நாளான 17-08-20.இன்று தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
அந்த வகையில் தற்போது யாழ்ப்பாணம் முழுவதும் திருவிழா களைகட்டியுள்ளது. மக்கள் அனைவரும் மிகவும் பக்தியுடன் தேரின் வடம் பிடித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
என்றுமில்லாத வகையில் யாழில் கூடியுள்ள பக்தர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இதில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவவதை  
காணக்கூடியதாக உள்ளது.
ஆலயத்தை சுற்றியும் ஏராளமான பக்த அடியார்கள் காணப்படுகின்றார்கள். தேரைச் சூழ்ந்துள்ள மக்கள் கூட்டத்தையும், வடம் பிடித்து தேரை இழுக்கும் காட்சிகளையும் பார்க்கும் போது மெய்சிலிர்க்க 
வைக்கின்றது

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>

 


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.