சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய விநாயகர் சதுர்த்தி விரதம்

விநாயக பக்தர்களுக்கு..மாசி மாத மஹா சங்கடஹரசதுர்த்தி விரதத்தின் மகிமை வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை 
எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேடமானவை. 
எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும்
 சங்கடஹர சதுர்த்தி
 விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான
 விரதம். இதை மேற்கொண்டு கணபதியை 
பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை.
சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த
 சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து 
விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை
 அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி.
 பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.மாசி மாதத்தில் பௌர்ணமிக்கு அடுத்து
 வரும் சதுர்த்தியே மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். இந்த சிறப்பான 
விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய், நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார்.கிருஷ்ணர், புருகண்டி முனிவர் ஆகியோர் 
சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து 
விநாயகரின்
 அருளைப் பெற்றனர். சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது.
கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி 
விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான்.பாண்டவர்கள் இந்த விரதம் இருந்தே 
வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த 
சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம்.மாசி மாத தேய்பிறை செவ்வாய்க்கிழமை 
அன்று வரும் சதுர்த்தி திதியில் ஆரம்பித்து ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால் எண்ணியது எண்ணியவாறே நடக்கும். எல்லா காரியமும் தடையின்றி நடக்கும். இந்த விரதத்தால் தீராத 
நோய் தீரும். நிலையான இன்பம் கிட்டும். கல்வி 
அறிவு, புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி, நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, பெருமைக்கு உரிய புகழ் என எல்லா 
நன்மைகளையும் அடைய முடியும்.சனி தோஷத்திற்கு 
ஆட்பட்டு கஷ்டம் அனுபவிப்பவர்களுக்கு 
இந்த விரதம் ஒரு நல்ல விடிவு.தன்னைக் கிண்டல் செய்த சந்திரனின் ஆணவத்தைக் கண்டித்து சாபமிட்டார் விநாயகப்பெருமான்.ஆணவம் ஒழிந்த 
சந்திரன் இந்த சதுர்த்தி நாளில்தான் அனுக்கிரஹம் பெற்றான்.எனவே இந்த நாளில் கணபதியை தரிசித்து விட்டு 
சந்திரனைக் காணலாம் என்று சொல்லப்படுகிறது. வாழ்வின் எல்லா நலன்களையும் 
அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையை உணர்ந்து பலன் பெறுவோம்.விநாயக பெருமானின் அருளை பெற உதவும் ஸ்லோகங்களை பாடிப் பலன் அடையலாம்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.