மருதடி விநாயகர் கோயில் சிவயோகி ஒருவரால் ஸ்தாபிக்கப்பட்டுப் பூசிக்கப்பட்ட புண்ணிய தலமாகும். கோயிலின் தென் திசையில் உள்ள திருக்குளம் ‘பிள்ளையார் குளம்’ என வழங்கப்பட்டது.
18 நாட்கள் உற்சவம் புது வருடப்பிறப்பன்று தேர்த்திருவிழா பஞ்சமுகவிநாயக விக்கிரகமும் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயில் மேற்கு நோக்கியுள்ளது. விநாயகர் மூலஸ்தானத்தில் ஆகுவாகனாகக் காட்சியளிக்கிறார். 2.2.87 கும்பாபிஷேகம் நடைபெற்ற போது மலர் ஒன்று வெளியிடப்பட்டது.
கோயிலில் உறையும் பஞ்சமுகவிநாயகர் ஐந்து தொழிலைச் செய்கின்றவரும் ஐம்பொறிகளை அடக்கி ஐந்தெழுத்தை ஓதும் அன்பர்களை ஆள்கின்றவரும் ஐந்து மூர்த்திகளுக்கும் அதிபரான பரம்பொருள் தாமே என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
திரிபுராசுரனால் துன்புற்ற தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட சிவபெருமான் யுத்தத்திற்கு முதலில் விநாயகரைத் தியானம் செய்கிறார். விநாயகர் சிவபெருமானுடைய ஐந்து திருமுகங்களிலிருந்தும் தோன்றி பஞ்சமுக விநாயகராகக் காட்சியருளுகின்றார்.
சிவபெருமான் திரிபுராசுரனை அழித்தார். இக்கதை விநாயக புராணத்திலுள்ளது. நவாலியூர் சோமசுந்தரப்புலவர் ‘மருதடி விநாயகர் பதிகம்’ பாடியுள்ளார். இவருடைய பாடல்களின் இறுதியடி வருமாறு அ
மைந்துள்ளது.
“கருதடியர் வினைகடிய மருதடியில் நடனமிடு
கற்பகப் பிள்ளையாரே”
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen