கிருஷ்ணரின் சிலையை வீட்டில் வைத்து வணங்க வேண்டுமானால், சில சம்பிரதாயங்களை கடைபிடிக்கவேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
கிருஷ்ணரின் சிலையை வீட்டில் வைத்து வணங்க வேண்டுமானால், சில சம்பிரதாயங்களை கடைபிடிக்கவேண்டும். சிலையின் உயரம் ஒரு கை அளவுக்கு மேல் இருக்க கூடாது. தனி பூஜை அறை இருக்க வேண்டும். எந்நேரமும் அது சுத்தமாக இருக்க வேண்டும்.
உடல் சுத்தம் மட்டுமின்றி, மன சுத்தம் இருந்தால் மட்டுமே பூஜை அறைக்குள் செல்லவேண்டும். குறிப்பாக கண்ணனின் சிலையை வைத்து வணங்கு பவர்கள் பயமின்றி இருக்க வேண்டும். மரண பயத்தை ஏற்படுத்தும் நோய்களோ, கவலையோ தாக்கினால் கூட அஞ்சாமல் கீதையை பாராயணம் செய்து கொண்டு, அவன் அருகில் இருக்க வேண்டும்.
ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை போட்டுக் கொள்ளவும்.ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம்
செய்ய வேண்டும்
மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.பூக்களை நீள்வட்ட வடிவத்தில்
அலங்கரிக்க வேண்டும்.
சந்தனம், தாழம்பூ, மல்லிகை, மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும்.ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen