உங்கள் வீட்டில் தயவு செய்து மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்யாதீர்கள்

ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்வதும், அதைப் பின்பற்றுவதும் சிறந்த பலனைத் தரக்கூடியதாகும். நாம் வீட்டில் செய்யக்கூடாத விஷயங்கள் சில உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம். வீட்டில் அஷ்டலட்சுமிகள் குடியேறும் வேளையான இரவில் துணிகளை துவைக்கக்கூடாது. குப்பையை வெளியே கொட்டக்கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தை இரவில் பேசக்கூடாது.
இறைவனுக்கு படைக்கும் பொருளாக விளங்கும் அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக்கூடாது. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.தனக்குள் வைத்துக்கொள்ளும் விஷயமான தன்னுடைய ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த எட்டும் பிறருக்கு 
தெரியக்கூடாது.
ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலை பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.மனிதனின் ஆதாரமாக விளங்கும் ஜலத்தை இடது கையினால் அருந்தக்கூடாது.உடம்பிலிருந்து உதிர்ந்த முடியையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் போடக்கூடாது. வெளியே எரிந்து விட வேண்டும்.
திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு சென்று வந்தவுடன் குளிக்கக்கூடாது.சாப்பிடும் உணவை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது.ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது.கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.