திருவண்ணாமலை கிரிவலம் செல்ல 20 ஆயிரம் பக்தர்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும்
அக்னி ஸ்தலான அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலில் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறும் போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கார்த்திகை பெளர்ணமியை முன்னிட்டு17-11-2021. நேற்று மதியம் 1 மணியில் இருந்து வரும் 20-ம் தேதி (சனிக்கிழமை) வரை கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இதனிடையே, கார்த்திகை தீபத் திருவிழாவில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை18-11-2021. இன்று நடைபெற்றபோது. தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், திருவண்ணாமலையில் இன்றும், நாளையும் 5,000 உள்ளூர் பக்தர்கள், 15 ஆயிரம் வெளியூர் பக்தர்கள் என 20,000 பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கலாம் எனவும், கொரோனா பரவல் காரணமாக கோயிலுக்குள் அனுமதி அளிக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நாளை காலை காலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.