வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்., வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன்
24.09.2022 இன்று வெகுசிறப்பாக ஆரம்பமானது.
கிரிஜைகள், வசந்தமண்டபப் பூஜை என்பன இடம்பெற்று காலை 8.45 மணிக்கு கொடியேற்றம் மிகச்சிறப்பாக இடம்பெற்றதுடன் கருட வாகனத்தில் எழுந்தருளிய வல்லிபுர ஆழ்வார் ஆலய உள்வீதியில் வலம் வந்தார்.
சப்பறத் திருவிழா ஒக்டோபர் 7ஆம் திகதியும், தேர்த்திருவிழா ஒக்டோபர் 8ஆம் திகதியும், சமுத்திரத் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
கேணித் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ஆம் திகதி காலையும், அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்று பெருந்திருவிழா நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen